முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சருமம் பளபளக்க...

ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழ த்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும். இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.

லயன் ஃபிஷ்

தனது உணவுக்காக மற்ற அரிய வகை மீன்களை அழித்துவரும் லயன்ஃபிஷ்-ன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெர்முடா நாட்டு உணவகம் ஒன்று லயன்ஃபிஷ்-ஐ வைத்து சமையல் போட்டியை நடத்தியது. இதற்காக ஆளில்லா ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ரோபோ கடலில் உள்ள லயன்ஃபிஷ்க்களை வேட்டையாடியது. கரைக்கு பிடித்து வந்து வியப்பை ஏற்படுத்தியது.

மாரடைப்பை கண்டறியும்

கார் ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு வந்தால் கண்டறியும் தொழில்நுட்பவசதியை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் வாகன விபத்துகள் தடுக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பான் கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, ஆய்வாளர்களுடன் இணைந்து ஓட்டுநரின் மனநிலையை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். உயர் அழுத்த எலெக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி.) மற்றும் பல மருத்துவ அளவீடுகளை வைத்து ஓட்டுநரின் மனநிலையை கார் உணரும் என்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் கேவ்யன் நஜாரியன் கூறுகிறார். இந்த ஆய்வாளர் குழுவின் சோதனை  2020-ம் ஆண்டு நிறைவு பெறுமாம்.

நுரையீரல்கள் இன்றி...

கனடாவை சேர்ந்த மெலிஸ்சா என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவை அடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த நுரையீரலை அகற்றி விட்டு தானமாக பெற்று மாற்று நுரையீரல் பொருத்த முடிவு செய்தனர். இதற்கிடையே உடல் உறுப்புகள் செயல் இழப்பதை தடுக்கவும்,  அவரின் உயிரை காப்பாற்றவும் 2 நுரையீரல்களும் அகற்றப்பட்டு, சிறிய செயற்கை நுரையீரல் பெனாய்ட்டின் இதயத்துடன் பொருத்தப்பட்டது.  நுரையீரல்கள் இன்றி செயற்கை நுரையீரலுடன் 6 நாட்கள் உயிர் வாழ்ந்தார். அதன் பின்னர் அவருக்கு நுரையீரல் தானமாக கிடைத்ததை அடுத்து பொருத்தப்பட்டன. தற்போது  உடல் நலத்துடன் இருக்கும் அவர், உலகிலேயே நுரையீரல் இன்றி 6 நாட்கள் உயிர் வாழ்ந்த முதல் மனிதர் ஆவார்.

மனிதர்களுக்கு நீல நிறக்கண்கள் எப்போது தோன்றின?

உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் நீல நிற கண்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். உள்ளூர் வழக்கில் இதை நாம் பூனைக் கண் என்று குறிப்பிடுவோம். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் மனிதர்களுக்கு பொதுவாக அடர் பழுப்பு நிற கண்களே காணப்பட்டன. கருங்கடல் பகுதியில் உள்ள மனிதர்களிடம் மரபணுவில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றம் காரணமாக அடர் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறக் கண்கள் உருவாகின. இது பின்னர் படிப்படியாக பல்வேறு பிரதேசங்களுக்கும் பரவின. தற்போது உலக மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பேர் பூனை கண் எனப்படும் நீல நிற கண்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொம்பு வைத்த கிரீடங்கள் எப்போது தோன்றின தெரியுமா?

ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago