முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேகம் அதிவேகம்

உலகின் அதிவேக போர் விமானங்களில் முதல் இடத்தில் நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15. உலகின் அதிவேக போர் விமான மாடல் இதுதான். அதிகபட்ச வேகம் - மேக் 6.72 . இரண்டு ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போர் விமான மாடல். 2-வது இடத்தில் லாக்ஹீட் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு. அதிகபட்ச வேகம் - மேக் 3.0+ இதுவும் லாக்ஹீட் ஏ12 உளவு விமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மொத்தமே 32 பிளாக்பேர்டு விமானங்களை தயாரிக்கப்பட்டன. 3-வது இடத்தில் லாக்ஹீட் ஒய்எஃப்-12. அதிகபட்ச வேகம் - மேக் 3.0. எதிரி விமானங்களை இடைமறித்துதாக்கும் தாக்கும் ரகத்தை சேர்ந்தது. அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் உள்ளது. 74,000 அடி உயரத்தில் மேக் 3.2 வேகத்தில் பறக்கும்.மொத்தமே மூன்று விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன.

நானோ டிஸ்க்‘ முறை

ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மரணம் அடையும் உயிர் கொல்லி நோயான காச நோயை கண்டரிய ஒருவாரம் ஆகும் நிலையில்,  தற்போது புதிய முறையில் ரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் கண்டறிய  முடியும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு ‘நானோ டிஸ்க்‘ முறை என பெயர்.  இதன் மூலம் நோயாளிக்கு விரைவாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியுமாம்.

மனிதர்களுக்கு நீல நிறக்கண்கள் எப்போது தோன்றின?

உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் நீல நிற கண்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். உள்ளூர் வழக்கில் இதை நாம் பூனைக் கண் என்று குறிப்பிடுவோம். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் மனிதர்களுக்கு பொதுவாக அடர் பழுப்பு நிற கண்களே காணப்பட்டன. கருங்கடல் பகுதியில் உள்ள மனிதர்களிடம் மரபணுவில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றம் காரணமாக அடர் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறக் கண்கள் உருவாகின. இது பின்னர் படிப்படியாக பல்வேறு பிரதேசங்களுக்கும் பரவின. தற்போது உலக மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பேர் பூனை கண் எனப்படும் நீல நிற கண்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகத்தில் சரிந்த ஜியோ

கிரிடெட் "சூசி" என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இலவச சலுகையுடன் ஜியோ 4ஜி சேவை தொடங்கினாலும், நாட்கள் செல்ல செல்ல வேகம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இதில் சேர்ந்ததே வேகம் குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இருப்பினும் வேகம் குறைந்தாலும் நாட்டில் இப்போதும் பலர் ஜியோவை நாடி ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்தால் ரூ.1.67 லட்சம் பரிசு தொகை : வித்தியாசமாக அறிவித்த நகர் எது தெரியுமா?

இத்தாலி நாட்டிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்நகரத்தின் மேயர் முடிவு செய்தார்  இதனை அடுத்து லாஸியோ நகரத்தின் மேயர் நிகோலா ஜிங்காரெட்டி என்பவர் இத்தாலியிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்துகொண்டு திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 1.67 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பரிசை பெறுவதற்காகவே பலர் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர் கூறப்படுகிறது. இதே நகரத்தில் தான் பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலைகளின் நகரம் எது தெரியுமா?

கேரள மாநிலத்தில் அதிகமான சிலைகளை கொண்டுள்ள நகரம் எது என்று தெரியுமா.. அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தான் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயலகம் முன்பு வைக்கப்பட்ட மாதவராவ் என்பவரின் சிலையில் தொடங்கி தற்போது வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு சிலைகளின் நகரம் என்ற செல்லப் பெயரும் உண்டு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!