முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை

உலகிலேயே மிகப் பெரிய சிலந்தி வலையை கடந்த 2008 இல் விஞ்ஞானிகள் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரில் உள்ள ஒரு ஆற்றின் மேல் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்த சிலந்தி வலை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சிலந்தி வலை 82 அடி அகலத்துடன் காணப்படுகிறது. இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இதுதான் மிகப் பெரிய சிலந்தி வலை எனக் கூறப்படுகிறது.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தவர்

எலெக்ட்ரானிக் உலகில் உள்ள பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது பிரிண்டட் சர்க்யூட் போர்டு ஆகும். ஒவ்வொரு எலெக்டாரானிக் பொருள்களின் உட்புறமும் பச்சை நிறத்தில் இருக்குமே அதுதான். இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பவுல் எய்ஸ்லெர். 1936 ஆம் ஆண்டு ரேடியோ என்ற வானொலி பெட்டியை இயங்கச் செய்வதற்காக இந்த பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தார்.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

ரயிலின் கடைசி பெட்டியில் மஞ்சள் நிற சாய் கோடுகள் ஏன்?

ரயிலில் மஞ்சள் நிற கோடுகள் கோணல் கோணலாக வரையப்பட்டிருக்கும். இது எதற்காக என்று யோசித்தது உண்டா? இந்த கோடுகள் ரயிலில் எல்லா இடத்திலும் குறியிடப்பட்டிருக்காது. இவை ரயிலின் கடைசி ஜன்னலுக்கு மேல் தான் குறியிடப்பட்டிருக்கும். இவை எதற்காக என்றால், இந்த மஞ்சள் நிற கோடுகள் இருந்தால், அவை முன்பதிவு செய்யப்படாத பெட்டி என்று அர்த்தம். மற்றவை எல்லாம் முன்பதிவு செய்யப்பட்ட ஒன்று. பயணிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை தெரிந்துகொள்ளவே இந்த குறியீடு. முன் பதிவு செய்யாத பெட்டிகள் நம்மூர்களில் மத்திய பகுதியிலும் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றிலும் இந்த மஞ்சள் நிற சாய் கோடுகளை காணலாம்.

தலை இல்லாமல் 1 வாரம் வரை கூட உயிர் வாழும் உயிரினம் எது தெரியுமா?

எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் உடல் இயங்குவதற்கு மூளையும் இதயமும் மிகவும் அடிப்படையானவையாகும். இவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் உடல் இயங்க இயலாது. ஆனால் ஒரே ஒரு உயிரினம் மட்டும் தலை இல்லாமல் சுமார் 1 வாரம் காலம் வரை உயிர் வாழும் என்பது ஆச்சரியம் தானே. அது வேறெதுவும் இல்லை. நாம் நம் சமையலறைகளில் பார்க்கும் கரப்பான்கள் தான் அவை. இதற்கு காரணம், அவை சுவாசிப்பதற்கு வாயையோ, மூளையையோ சார்ந்திருக்கவில்லை. அதன் உடல் முழுவதும் உள்ள துளைகள் வாயிலாகவே சுவாசிக்கிறது. அதே நேரத்தில் வாய் இல்லாவிட்டால் கரப்பான் இறந்து விடும். ஏனெனில் உணவு, தண்ணீர் இல்லாமல் எந்த ஜீவனாலும் உயிர் வாழ முடியாது தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago