முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆயுள் கூடும்

தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரம் பேரிடம் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காபி குடிப்பவர்களுக்கு உயிர் கொல்லி நோய்களான இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

கேஸ் அடுப்பால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா? / விஞ்ஞானிகளின் ஆய்வில் புது தகவல்

கேஸ் அடுப்புகள் பழசானாலும் சரி, புதுசானாலும் சரி, அவை தொடர்ச்சியாக மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. இந்த தனிமம்தான் இயற்கை எரிவாயு தொகுப்பில் முக்கியமான ஒன்றாகும். தற்போது தோராயமாக நாடு முழுவதும் சுமார 40 மில்லியன் கேஸ் அடுப்புகள் நாள்தோறும் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல அரை மில்லியன் எரிவாயு வாகனங்கள் சாலையில் பறக்கின்றன. இப்போது நினைத்து பாருங்கள். அவற்றிலிருந்து வெளியாகும் மீத்தேன் அளவு குறித்து. புவிவெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணியாக இது உள்ளது என ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் மேற்கொண்டுள்ள புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக அதன் விஞ்ஞானிகள் குழு தலைவர் எரிக் லேபெல் (Eric Lebel). இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெளியாகும் மீத்தேனில் முக்கால்வாசி பங்கு கேஸ் அடுப்பில் இருந்துதான் வெளியாகிறது என்பதை கண்டறிந்துள்ளோம் என எச்சரிக்கிறார்.

முத்தம் தவிர்க்கவும்...

குழந்தைகளை முத்தமிடக்கூடாது என்று கூறக்கேட்டிருப்போம். அதற்கு காரணம் உள்ளது. குழந்தைகளை இதழ்களில் முத்தமிடும் போது, 85 சதவீதம் பாக்டீரியாக்கள் இதழ் மற்றும் வாய் மூலமாக பரவி குழந்தையின் நலனை பாதிக்கிறது. பிறந்த 3 மாதங்களில் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் தவிர்ப்பது நல்லது.

நாளைய உலகம்

இந்த நான்கு கால் ரோபோ நாய்களை போன்றே இருக்கும். இந்த நான்கு கால் ரோபோ நிலநடுக்கத்தின் பொது மீட்பு பணி உதவிகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.இந்த ரோபோக்கள் இயற்கை பேரழிவுகளுக்கு குறிப்பாக பின்வரும் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இது அழகாக இருந்தாலும் இந்த ரோபோக்கள் ஒரு நாள் மனித உயிர்களை காப்பாற்றும் என நம்பப்படுகிறது.

காகித கேப்ஸ்யூல்

பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்