முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோகோ-விற்கு மாற்று.

‘கோகோ’ வில் இருந்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், பலாக் கொட்டையில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். பலாக் கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்து சாக்லேட் தயாரிக்க பயன்படும் பொருள் உருவாக்க முடியும். இதன் மூலம் கோகோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

தெரிந்தும் தெரியாதது

சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்குமாம். இதன் கர்ஜிக்கும் சப்தம், 8 கி.மீ வரை எதிரொலிக்கும். காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்தில் இருந்து பதினான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும். பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து 2-வது பெரிய விலங்கு சிங்கம்.

சேலையை பெண்கள் மட்டும்தான் அணிய வேண்டுமா என்ன...

சேலையை பெண்கள் மட்டும் தான் அணிய வேண்டுமா என்ன, நாங்களும் கட்டி அசத்துவோம்ல என கிளம்பிவிட்டால் மேற்கு வங்க ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். புஷ்பக் சென் என்ற அந்த துடிப்பு மிக்க 26 வயது இளைஞர்தான் தற்போது கொல்கட்டா வீதிகளில் சென்சேஷன். ஆடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது, அது பார்ப்பவரின் தலையில்தான் இருக்கிறது என உறுதிபட சொல்கிறார். தலையில் உச்சி குடுமியும், அடர்ந்த தாடியும், கட்டுமஸ்தான உடலுமாக புஷ்பக் சென், கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் சேலை கட்டி கொல்கத்தா வீதிகளில் நடந்து செல்லும் போது அனைவரின் கண்களும் இவரையே மொய்க்கின்றன. இவர் இத்தோடு விட்டாரா வெளிநாடுகளுக்கு சென்று சேலைகளில் பேஷன் ஷோ, தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போட்டோ ஷூட் என அசத்தி வருகிறார். இவர் சேலையுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

அதிகம் உற்பத்தி

உலக கம்பளி உற்பத்தியில் 2 சதவீதம் இந்தியாவில்  உற்பத்தியாகிறது.ராஜஸ்தான், ஜெய்சால்மர் நகரத்தில்தான் இந்தியாவில் கம்பளி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, கோடைகாலத்தில் உடலை வருத்தி எடுக்கும் கடும் வெயிலும், குளிர்காலத்தில்  உடலை துளைத்தெடுக்கும் கடும் பனிக்காற்றும் வீசும்.

கோழிகள் காது மடல்களின் நிறத்திலேயே முட்டை இடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கோழிகளுக்கு வெளிப்புறமாக தெரியும் வகையில் காதுகள் இல்லாவிட்டாலும், அவைகளுக்கும் காது மடல்கள் உள்ள. கோழிகளின் இனங்களை பொறுத்து காது மடல்களின்  வண்ணங்களும் அதற்கேற்ப மாறுபட்டு காணப்படும். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இது வழக்கமானதுதான். ஆனால் கோழிகள் தங்களின் காது மடல்களின் வண்ணத்திலேயே முட்டையிடும் என்பதுதான் ஆச்சரியம். வெள்ளை மடலை கொண்ட கோழி வெள்ளை முட்டையையும், அடர் வண்ணத்தை கொண்ட கோழி அடர் வண்ணத்திலும் முட்டையிடும் என்றால் அது ஆச்சரியம் தானே... இனி முட்டையை பார்க்கும் போது கூடவே உங்களுக்கு கோழிகளின் காது மடலும் நினவைுக்கு வரக் கூடும். ஆனால் ஒரே மாதிரி வெள்ளை வெளேரென முட்டையிடும் பிராய்லர் கோழிகளுக்கு இந்த விதி  பொருந்தாது என்பதை மறந்து விட வேண்டாம்.

சருமத்தின் வறட்சியை போக்க...

ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும். தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony