முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முருங்கை நல்லது

முருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிட்டால், ரத்த  அழுத்தம் கட்டுகுள் இருக்கும். சர்க்கரை வியாதி வராமல் பாதுகாக்கும். தூக்கமின்மையை போக்கும். மூட்டு இணைப்புகளில் வரும் வலியை போக்கும். செல் சிதைவை தடுக்கும். புற்றுநோய் வரவிடாமலும் தடுக்கும். மேலும் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

‘ப்ளாக் போர்டு’

பிளாக் போர்டு என்பது அமெரிக்க நாட்டை சார்ந்த ஓர் கல்வி மென்பொருள் நிறுவனம். இது முக்கியமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடி கல்வி கற்றுக் கொள்ளமுடியும். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.  கல்வி கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்கும் ‘ப்ளாக் போர்டு’ என்ற மென்பொருள் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எளிதில் கற்கவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தலிலும் மிகவும் உதவியாக இருக்குமாம்.

சங்கடத்தில் பேஸ்புக்

சட்டத்திற்கு எதிராக மற்றொரு நிறுவனத்தின் விஆர் (விர்சுவல் ரியாலிட்டி)எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 கோடி டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தகவல்

மேற்குவங்கத்தை சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தை எழுதியுள்ளார்.அவரது மற்றொரு பாடல் நமக்கு அருகாமையில் உள்ள வங்க தேசத்தின் தேசியப்பாடலாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமைப்பெற்ற ஒரே உலக கவிஞர் நமது ரவீந்திர நாத் தாகூர்தான்.

100 விதமான ஒலிகளை எழுப்பும் திறன் கொண்ட விலங்கு எது தெரியுமா?

100 விதமான ஒலிகளை எழுப்பும் விலங்கினம் எது தெரியுமா.. அது பூனைதான்.நாய்கள் கிட்டத்தட்ட பத்து விதமான ஒலிகளை மட்டுமே வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை ஆகும்.ஆனால் பூனைகள் கிட்டத்தட்ட 100 விதமான ஒலியை (மியோவ்) அவைகளின் வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை. நாய்களை விட பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானதாகும். அவ்வளவு ஏன்...! மனிதர்களை விடவும் பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானது. பூனைகள் அதன் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்நாளை தூங்குவதற்காக மட்டுமே செலவு செய்கின்றன. .நில நடுக்கம் உருவாகுவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் முன்பே நிலநடுக்கம் உருவாகுவதை பூனைகள் உணர்ந்து விடும். பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்த ஹிட்லர் அஞ்சி நடுங்கிய ஒரே விலங்கினம் பூனைதான்.

ஆராரோ... ஆராரோ...

தூக்கம் வராமல் தவிப்போருக்கு தீர்வாக இப்போது ரோபோ தலையணை வந்துள்ளது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, மூச்சுவிடுவதை சீராகக் கண்காணித்து, தூக்கத்தை சீராக்குகிறது. மேலும் இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான, ஆழமான தூக்கம் வர செய்யும். பாதியில் எழுந்தால்கூட இந்த தலையணை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறதுதான் ஆச்சரியம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago