முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிசய தம்பதிகள்

கொலம்பியா, மெடிலின் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான மரியா கார்சியா மற்றும் மிகுல் ரெஸ்ட்ரீபோ இருவரும் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர். பிளாட்பாரங்களில் தங்கியிருக்கும் போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்ததால், சேர்ந்து வாழ முடிவெடுத்து,  பயனில்லாத பாதாளச் சாக்கடையில் தங்களுக்கான இல்லத்தை உருவாக்கி குடியேறினர். பாதாளச் சாக்கடையில் 22 வருடங்களாக வசிக்கும் இவர்கள், தங்களுக்கு துணையாக ஒரு நாயையும் வளர்த்து வருகிறார்கள். இந்த இல்லத்தில் மின்சார வசதியைப் பெற்று, டி.வி உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்தி வருவதுதான் ஆச்சரியம்.

செவ்வாயில் ஆக்சிஸன் தயாரித்த நாசா

செவ்வாயில் முதன்முறையாக நாசா தனது பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் மூலம் ஆக்சிஸனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள மோக்ஸி என்ற இயந்திரம் மூலம் இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் செவ்வாயில் உள்ள சூழலை பயன்படுத்தி, அதில் உள்ள பெரும்பான்மையான கார்பன் டை ஆக்ஸைடை  ஆக்ஸிசனாக மாற்றியுள்ளது. இந்த முயற்சியானது மனிதர்கள் எதிர்காலத்தில் செவ்வாயில் குடியேறுவதற்கான ஒரு அச்சாரமாக எதிர்பார்க்கப்படுகிறது.

மழையின் பெயரில் கரன்சி வெளியிடும் நாடு எது தெரியுமா?

ஒவ்வொரு நாட்டு கரன்சிக்கும் அதாவது பணத்துக்கும் ஓர் பெயர் உண்டு. ஆனால் மழையின் பெயரையே கரன்சிக்கு சூட்டிய நாடு எது தெரியுமா... சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள நாடான போஸ்துவானா தான் அது. அந்நாட்டு கரன்சியின் பெயர்  போஸ்துவானன் புலா. அவர்கள் மொழியில் புலா என்றால் மழை. அவர்களின் அடிப்படையான அனைத்து கரன்சிகளிலும் இந்த புலா அதாவது மழை என்ற பெயர் இடம் பெற்றிருக்கும் என்பது ஆச்சரியம் தானே..

புகைப்பதால் மரணம்

195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகளவில் நடைபெறும் மொத்த மரணங்களில் 11 சதவீதம் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படுகிறதாம். இதன் காரணமாக உயிரிழப்போர் நாடுகள் பட்டியலில் இந்தியா  2-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தையும், அமெரிக்கா, ரஷ்யா 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன.

முக்தி அடைய

அசுவமேத யாகம் செய்த சூர்ய வம்சத்தை சேர்ந்த சகரன் எனும் மன்னனின் இறந்துபோன மகன்களுக்கு முக்தி அளிப்பதற்காக கங்கா தேவி பூமியில் பிறப்பெடுத்து கங்கை நதியாக ஓடுவதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே கங்கையில் அஸ்தியைக் கரைத்து தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்கின்றனர்.

வெள்ளை மாளிகையில் முதலை வளர்த்த அதிபர்

அமெரிக்காவின் ஆறாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் John Quincy Adams இவர் 1825 முதல் 1829 வரை அதிபராக இருந்தார் அப்போது அவருக்கு பிரெஞ்சு தூதர் முதலை ஒன்றை செல்லப்பிராணியாக பரிசாக வழங்கினார் அந்த முதலையை ஜான் குவின்சி வெள்ளை மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் வளர்த்து வந்தார் அங்கு அது ஜாலியாக நீந்தி விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் இவர் முற்றிலும் வித்தியாசமான அதிபர் தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago