முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

அமிர்தம் போன்ற சுவை

இந்து மதத்தில் சிவ பெருமானை துதிக்கும் பக்தர்கள் சைவர்கள் என்றும் திருமாலை தொழுபவர்கள் வைணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வைணர்கள் தங்களது இஷ்ட தெய்வமான மதுரை கள்ளழகர் போன்ற தெய்வங்கள் திரு உலா வரும் போது அவர்களை வரவேற்கும் விதமாக அக்கார வடிசல் என்ற ஒரு இனிமையான பிரசாத்தை உருவாக்குவார்கள். தூய தமிழில் அக்காரம் என்பது இனிப்பை குறிக்கும் வெல்லத்திற்கான பெயராகும். இந்த வெல்லத்தை பயன்படுத்தி தயாரிக்கும் அக்கார வடிசல் பிரசாதம், நெய், முந்திரி, திராட்சை போட்டு நன்றாக குழையும் வகையில் அரிசியை தண்ணீருக்கு பதிலாக பாலை சுண்ட காய்ச்சி அதில் போட்டு குழைவாக வடிப்பார்கள். இந்த அக்கார வடிசல் சுவை அமிர்தமாக இருக்கும்.

நினைவாற்றல் அதிகம்

யானைகள் எதையும் மறக்காது. ஆனால், பெரும்பாலும் தூங்குவதே இல்லை. நல்ல நினைவாற்றலுக்கு தூக்கம் மிக அவசியம். ஆனால் போட்ஸ்வானா வகை யானைகளை ஆராய்ந்ததில், அவை சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரமே தூங்குவதாகவும் சிலநாட்கள் அவை தூங்குவதே இல்லை, எனினும் அவற்றின் நினைவாற்றல் அதிகமாக உள்ளது.

பாகிஸ்தான் வெள்ளத்தில் இந்திய வகை டால்பின்

அழியும் உயிரினங்களில் ஒன்றாக பன்னாட்டு வன விலங்கு சம்மேளனம் இந்திய வகை டால்பின்களை பட்டியலிட்டுள்ளது. இவை இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியங்களில் உள்ள நன்னீர் நிலைகளில் வாழக்கூடியவை. டால்பின்கள் மனிதர்களோடு நெருக்கமாக பழகக் கூடியவை என்பது நாம் நன்கு அறிந்ததே. இந்த இந்திய வகை டால்பின்களை, கங்கை நதி டால்பின்கள் என குறிப்பிடுகின்றனர். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா போன்ற ஆழமும் நீளமும் மிக்க நதிகளில் இவை காணப்படும். தற்போது இந்தியாவில் அருகிவிட்ட இவை அண்டை நாடான பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி, வங்க தேசத்தில் பாயும் பிரம்மபுத்ர தீரங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 1801 இல் இது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. தற்போது அருகி வரும் இந்த டால்பின்கள் குறைபார்வை உடையவை என்றும் சொல்லப்படுகிறது. எப்போதும் தனித்து திரிபவை. குட்டி போட்டால் குட்டிகளோடு சிறிது காலம் சேர்ந்து சுற்றும். வளர்ந்ததும் மீண்டும் தனித்தனிதான். பாகிஸ்தானில் சிந்து நதியில் தத்தளித்த டால்பினை ஆர்வலர்கள் மீட்டு பாதுகாப்பாக ஆழமான பகுதியில் கொண்டு நீந்த விட்டனர். தற்போது இந்த செய்தி மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வலர்களால் பகிரப்பட்டு வருகிறது.

மனிதர்களோடு ஏலியன்கள் பேசினரா? நீடிக்கும் ரேடியோ சிக்னல் புதிர்கள்

வேற்று கிரகங்களில் இருந்து ரேடியோ சிக்னல்கள் வந்தால் அவற்றை ரீசீவ் செய்வதற்கான ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் ஓஹேயோ பல்கலை கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேடியோ அப்சர்வேட்டரி ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக் இயர் ரேடியோ டெலஸ்கோப் என்ற அமைப்பாகும். பிரபஞ்சத்துக்கு வெளியிலிருந்து வரும் ரேடியோ அலைகளை உள்வாங்கி அதை ஆய்வு செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் சுவாரசியமான விஷயம் ஏலியன்களை குறிவைத்தே இந்த ஆய்வகம் செயல்பட்டது. அது போன்ற தகவல் ஒன்றையும் இந்த ரேடியோ டெலஸ்கோப் ரீசீவ் செய்தது என்பதுதான் ஆச்சரியம்.பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது என்றும், அதன் ரேடியோ அதிர்வெண் 1420 மெகா ஹெர்ட்ஸ் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த சூழலில்தான் 1977 இல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு அதிசயம் நடந்தது. ஜெர்ரி இகாமென் என்ற ஆய்வாளர் பணியில் இருந்த போது பிரபஞ்சத்துக்கு வெளியில் இருந்து வந்த வித்தியாசமான ரேடியோ அலை ஒன்றை பதிவு செய்துள்ளார். அது வெறும் 72 விநாடிகள் மட்டுமே நீடித்துள்ளது. அதை டீகோட் செய்த போதுதான் உலகுக்கே மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது ஆங்கிலத்தில் 'வாவ்' என அது குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் பூமியை, மனிதனை பார்த்து வாவ் என்று கூறியது யார் என்ற மர்மம் இன்னும் விலகாத புதிராகவே நீடித்து வருகிறது. இது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன. ஏலியன்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைப்புகளில் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் என்ற கின்னஸ் சாதனையையும் 1995 இல் இது படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 98 இல் இந்த அப்சர்வேட்டரி கலைக்கப்பட்டு விட்டது.

எச்சரிக்கை எச்சரிக்கை

அமெரிக்காவில் தயாராகியுள்ள ஐபோன் வடிவிலான ஸ்மார்ட்போன் வடிவ துப்பாக்கியில் 9 மி.மீ. அளவு கொண்ட குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வர உள்ள இந்த நவீன துப்பாக்கியை ஆன்லைனில் 12,000-த்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது ஆச்சரியமான தகவல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony