முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நானோ டிஸ்க்‘ முறை

ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மரணம் அடையும் உயிர் கொல்லி நோயான காச நோயை கண்டரிய ஒருவாரம் ஆகும் நிலையில்,  தற்போது புதிய முறையில் ரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் கண்டறிய  முடியும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு ‘நானோ டிஸ்க்‘ முறை என பெயர்.  இதன் மூலம் நோயாளிக்கு விரைவாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியுமாம்.

வேற்று கிரகவாசிகளை அறிய ...

வேற்று கிரகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் கூறித்து அது ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  இதற்கு மனித இனம் இன்னும் முன்னேறாமல் இருப்பதே காரணமாம். அதாவது, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாக இருக்கிறதாம். ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளை போலவே தெரியலாம் என் ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

கோகோ-விற்கு மாற்று.

‘கோகோ’ வில் இருந்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், பலாக் கொட்டையில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். பலாக் கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்து சாக்லேட் தயாரிக்க பயன்படும் பொருள் உருவாக்க முடியும். இதன் மூலம் கோகோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

ஆய்வகத்தில் தயாரான செயற்கை வைரங்கள்

நகைகள் என்றாலே உலகம் முழுவதும் முன்னணியில் இருப்பது தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள்தான். இவற்றில் பெரும்பாலும் இவை அனைத்தும் இயற்கை முறையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது பெரும் செலவு பிடிக்கும் காரியம் என்பதால் யாரும் இதுவரை அதில் ஈடுபடவில்லை. வைரத்தில் இதுவரை செயற்கை வைரம் என கூறப்பட்டவை அனைத்தும் விலை மலிவான வைரமாகவே இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக இயற்கை வைரத்துக்கு இணையாக மதிப்புள்ள செயற்கை வைரத்தை நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜூவல்லரி பிராண்டான பந்தோரா முதன்முறையாக தனது ஆய்வகத்தில் தயார் செய்த செயற்கை வைரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மற்றொரு பிராண்டான பந்தோரா பிரில்லியன்ஸ் ஏற்கனவே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது இதன் புதிய முயற்சி 2022 இல்  உலக சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சிகிச்சை

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியை மேற்கொண்டது. வயதானவர்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றுவதுதான் அந்த முயற்சி. வயதானவர்கள், உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் நல்லவிதமாக வந்துள்ளதாம்.

புதிய உணவகம்

லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பால் காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்