முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நெருப்புடா

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 190 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது, ஹவாய் தீவுகளில் உள்ள  கிலயூயே எரிமலை. இந்த எரிமலையில் ஹலெமா என்ற எரிமலைக் குழம்பு ஏரி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த எரிமலை, லாவா குழம்பைக் கக்கியபடி, பரவுவதால்தான் இதற்கு கிலயூயே என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

முதன் முறையாக

உலகில் முதன்முறையாக கிங்ஸ்டனில் உள்ள டோனர் எனும் பொம்மை நிறுவனம் திருநங்கை வடிவிலான பொம்மைகளைத் தயாரித்துள்ளது. திருநங்கையான ஜாஸ் ஜென்னிங்ஸை மாடலாக வைத்து இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திருநங்கைகள் குறித்த நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் ஏற்படுமாம்,

தீபாவளி ஓர் ஆச்சரியமான செய்தி

19 ஆம் நூற்றாண்டு வரை தமிழின் எந்த இலக்கிய ஆவணத்திலும் தீபாவளி என்ற சொல் கிடையாது. வட நாட்டில் இருந்தும், விஜயநகர பேரரசின் போதும் தமிழகத்துக்கு தீபாவளி வந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தீபாவளியை இந்துக்கள் தவிர சமணர்கள், புத்தர்கள் மற்றும் சில வெளிநாடுகளிலும் கொண்டாடுகின்றனர்.1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. பழங்காலத்தில் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தீபாவளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். எது எப்படியோ இன்றைக்கு தீபாவளிக்கு புத்தாடை புனைந்து, பலகாரங்கள் செய்து, புதுப்படம் ரீலிஸ் செய்தால்தான் தமிழனின் தீபாவளி நிறைவு பெறும்.

சளி பிரச்சினைக்கு...

நெஞ்சில்  சளிக்கட்டிக்கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து அடிக்கடி இருமி வயிற்று வலி ஏற்படுவர்களுக்கும் ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும். மேலும், சளியின் தாக்கம் குறையும். ஆனால் அதிகம் சேர்க்க கூடாது.

இந்தியாவின் மிதக்கும் சந்தை

இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பட்டூலியில் கடந்த 2018 இல் திறக்கப்பட்டது. இந்தச் சந்தையில் 200 கடைகளுக்கு மேல் உள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்துள்ள இந்தச் சந்தையில் படகுகள் மூலமாகப் பட்டூலியில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கடைக்காரர்கள் பழம், காய்கறிகள், மீன் போன்றவை கிடைக்கும். படகுகள் மூலமாகக் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளைத் திறக்க மற்றும் பிற கட்டுமான வசதிகளை ஏற்பாடு செய்ய 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். அருகில் பிற சந்தைகள் இருந்தாலும் இங்கு வந்து பொருட்களை வாங்குவது என்பது புதிய அனுபவமாக உள்ளது என்று வாடிக்கையாளர்களும் வணிகர்களும் கூறுகின்றனர்.

பேச முடியாது

குரங்குகளால் மனிதர்கள் போல் பேச முடியுமா? என்ற ஆராய்சியில், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருந்தாலும், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லை என தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago