முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ள வினோத ஹோட்டலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விதவிதமாக ஹோட்டல்களை கட்டுவதை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தைவானில் உள்ள தெய்பெய் நகரில் கட்டப்பட்டிருக்கும் ஹோட்டலின் வடிவத்தை கேட்டால் உவ்வே என்று சொல்லத் தோன்றும். ஆனால் அப்படி ஒரு விசித்திர ஹோட்டல் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த ஹோட்டல் டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டும் தட்டு, டம்ளர், உணவு பொருள்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் அனைத்தும் கழிவறை பொருள்களைப் போலவே பரிமாறப்படுகின்றன. அட கஷ்டகாலமே.. இப்படி ஒரு ஹோட்டலா என சொல்லத் தோன்றுகிறது அல்லவா.

ஆய்வாளர்களின் விருப்பம்

ஹரியானாவில் உள்ள ராக்கிகர்ஹி ஓவுறு தொல்பொருள் ஆய்வாளர்களின் கனவாகும். இதை 1963-ம் ஆண்டு சிந்து சமவெளியில் மிக பெரிய நகரம் என கண்டுபிடித்தனர். மொஹெஞ்சோடரோ மற்றும் ஹாரப்பாவில் உள்ள தளங்களைவிட இது பெரிது என்று கூறப்படுகிறது. தற்போது அதில் இருந்த பொக்கிஷங்கள் களவாடப்பட்டுள்ளன.

புதிய எரிபொருள்

பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்கியுள்ளனர் ஜப்பான், யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அந்த வகை பாசியிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் கலவையை விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமாம். இந்த கலவை மூலம் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

நோபல் பரிசுக்கு ஹிட்லர் பரிந்துரைக்கப்பட்டார் தெரியுமா?

ஹிட்லர், வரலாற்றில் படிந்த ரத்தகறை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் கொடுங்கோலராகவும், யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரியாகவும் உலகம் முழுவதும் அவரை கண்டு ஒரு காலத்தில் நடுநடுங்கியது. இந்த சூழலில் அவர் உலகின் உயரிய விருதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா.. அதுவும் எதற்கு தெரியுமா... சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு. அவரை பரிந்துரை செய்து 1939 இல் சுவீடன் நாட்டின் எம்பி எரிக் பிரான்டிட் என்பவரால் பரிந்துரை செய்யப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக அந்த பரிந்துரையை அந்த எரிக் பிரான்டிட் திரும்ப பெற்றுக் கொண்டார். இதில் ஒரு முரண் நகையான விசயம் என்னவென்றால், நோபல் பரிசு  பெறுவதற்கு ஜெர்மானியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஹிட்லர் தடை விதித்திருந்தார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக அவரது பெயரே நோபல் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..

கோடீஸ்வரர் பிச்சை

கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழரான சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6.5 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.

கொசுக்களை அழிக்க

உயிர் அறிவியல் தொழில் நுட்ப துறையான 'வெரிலி' உதவியுடன் தற்போது 20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது கூகுள் நிறுவனம். வால்பாஷியா பாக்டீரியா மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஆண் கொசுக்களை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். இந்த ஆண் கொசுக்களுடன் சேரும் பெண் கொசுக்கள் போடும் முட்டைகள், புதிய கொசுக்களை உருவாக்கும் தன்மை அற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony