முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பேஸ்புக் எண்ணிக்கை

உலகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகம் ஆகும். ட்விட்டர் சேவையை ஏப்ரல் மாத வாக்கில் சுமார் 32.8 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஸ்நாப்சாட் சேவையை மார்ச் 31-ந்தேதி வரை 16.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

புரிதல் சுலபம்

ஜப்பானின் பேனாஸோனிக் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ள புதிய மெகாபோன், பேசும் குரலை ஆங்கிலம், சீனம், கொரியா என பல மொழிகளில் இன்ஸ்டன்டாக மொழிபெயர்க்கிறது. 10 ஆயிரம் மெகாபோன்களை முதல்கட்டமாக தயாரித்துள்ள பேனாஸோனிக் நிறுவனம், அதனை 2018 ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ‘படிகளை கவனியுங்கள்’, ‘ரயில் தாமதமாக வருகிறது’ உள்ளிட்ட 300 ப்ரீசெட் வார்த்தைகளை துல்லியமாக 3 மொழிகளில் ஆட்டோமேடிக்காக மொழிபெயர்க்கும் திறன் கொண்டது இந்த மெகாபோன்.

ஆய்வாளர்களின் விருப்பம்

ஹரியானாவில் உள்ள ராக்கிகர்ஹி ஓவுறு தொல்பொருள் ஆய்வாளர்களின் கனவாகும். இதை 1963-ம் ஆண்டு சிந்து சமவெளியில் மிக பெரிய நகரம் என கண்டுபிடித்தனர். மொஹெஞ்சோடரோ மற்றும் ஹாரப்பாவில் உள்ள தளங்களைவிட இது பெரிது என்று கூறப்படுகிறது. தற்போது அதில் இருந்த பொக்கிஷங்கள் களவாடப்பட்டுள்ளன.

நிறம் மாறும்

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் ஹேர் டை ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயர் (fire) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஹேர் டை தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மை கொண்டது. அடர்சிவப்பு தொடங்கி பல்வேறு நுண்ணிய நிறங்களில் இந்த ஹேர் டை கிடைக்கிறது.

கோகோ கோலா கிடைக்காத நாடு

உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் அங்குள்ள எந்த பெட்டிக்கடையிலும் குடிநீர் பாட்டில் கிடைக்குமோ கிடைக்காதோ.. ஆனால் நிச்சயம் கோகோ கோலா கிடைக்கும். அந்த அளவுக்கு தனது வணிகத்தை பரந்து கடை விரித்துள்ளது. ஆனால் கோகோ கோலா கிடைக்காத நாடுகளும் உலகில் உள்ளன என்றால் நம்புவீர்களா.. இரும்புத்திரை நாடு என அழைக்கப்படும் வட கொரியா, அமெரிக்க சிங்கத்தை சீண்டி பார்த்த கியூபா ஆகிய 2 நாடுகளில்தான் கோகோ கோலா கிடைக்காது. அந்த கம்பெனி காரர்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்து பார்த்தும் கூட இந்த 2 நாடுகளும் தங்களது நாடுகளில் அதை விற்க அனுமதி மறுத்து விட்டன. இருந்த போதிலும் தங்களது பக்கத்து நாடுகளான மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து சில வியாபாரிகள் இறக்குமதி செய்து விற்பதாக யூகங்கள் உள்ளன.

செல்ஃபி எடுக்க

செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கேமிராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. அதன்மூலம் சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்