முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

மூட்டுகள் பலப்பட

எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டும்.

சொடக்கு எடுக்கும்போது விரல்களிலிருந்து சத்தம் ஏன் வருகிறது தெரியுமா?

கை, கால் விரல்களிலிருந்து சொடக்கு எடுக்கும்போது சத்தம் ஏன் கேட்கிறது என்று தெரியுமா? நாம் கை கால்கள் களைப்பாக இருக்கும்போது விரல்களை வளைத்து, இழுத்து சொடக்கு எடுப்பது வழக்கம். கை விரல்களை போலவே, கால் விரல்களிலும் நாம் அவ்வாறு செய்வதுண்டு. சிலருக்கு அவ்வாறு சொடக்கு எடுத்து முடித்ததும் ஒரு ஆசுவாசம் வந்ததுபோல உணர்வார்கள். ஆனால், இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என தெரியுமா.. நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல விரல்களில் உள்ள எலும்புகளிலோ, அல்லது தசை நார் இறுக்கம் தளர்வதாலோ வருவதில்லை. மாறாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் நைட்ரஜன் வாயு குமிழ்கள் (Nitrogen Gas Bubbles) நாம் அழுத்தும்போது வெடிப்பதனால் சொடக்கு எடுப்பது போல சத்தம் நமக்கு கேட்கிறது.

வழித் தோழனாக

கூகுள் நிறுவனத்தின் மேப் சேவை தற்போது, ஜி.பி.எஸ் மூலம் குரல் வழிகாட்டும் முறை உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது. மேலும், பெட்ரோல் பங்க், உணவகங்கள், விடுதிகளை தெளிவாக காட்டுகிறது.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாட்டால் சூரிய மின்சக்தி உற்பத்தி 25 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீனா, அரேபிய தீபகற்பம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காற்று மாசுபாடு அதிகம் உள்ளதால் மின்சக்தி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

புத்துணர்வு தரும்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல் பாதுகாக்க முடிகிறது. கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து அதில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தினால்,  உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago