முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் ஷாமி கபாப்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

சிக்கன் ஷாமி கபாப் செய்யத் தேவையான பொருள்கள்;

 

  1. கீமா செய்த போன்லெஸ்  சிக்கன் - 100 கிராம்.
  2. பொட்டுக் கடலை -25 கிராம்.
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் -  20 கிராம்.
  4. மிளகாய் தூள் - 10 கிராம்.
  5. சீரக தூள் - 10 கிராம்.
  6. சாட் மசாலா  - 5 கிராம்.
  7. உலர்ந்த மாம்பழ தூள் - 5 கிராம்.
  8. ஏலக்காய் -2.
  9. அன்னாசி மொக்கு - 1.
  10. லவங்கப் பூ - 5.
  11. பட்டை சிறிய துண்டு - 1.
  12. பிரியாணி இலை -2.
  13. கொத்தமல்லி, புதினா  பொடியாக நறுக்கியது – சிறிதளவு.
  14. ரிபைன்ட்  ஆயில் 50 மில்லி.
  15. நெய் - 2 ஸ்பூன்.
  16. இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்.
  17. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 50 கிராம்.
  18. உப்பு -  தேவையான அளவு .

 

Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் கடாய் வைத்து ரீபைன்ட் ஆயில் 20 மில்லி உற்ற வேண்டும்.
  2. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 20 கிராம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  3. பொட்டுக் கடலை 25 கிராம், கீமா செய்த போன்லெஸ்  சிக்கன் 100 கிராம், ஏலக்காய் 2,அன்னாசி மொக்கு 1,லவங்கப் பூ5,பட்டை சிறிய துண்டு 1,பிரியாணி இலை 2, மற்றும் மிளகாய் தூள் - 10 கிராம் போட்டு வதக்கவும்.
  4. இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்,தேவையான அளவு  உப்பு போட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேகவிட வேண்டும்.
  5. இப்போது,அடுப்பில் இருந்து இறக்கி விடலாம், 
  6. நன்கு ஆறிய உடன் மிக்சியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் மிக்சியில்அரைத்த மாவை போட்டு இதனுடன்  நறுக்கிய வெங்காயம் 2 ஸ்பூன், நறுக்கிய மல்லி ஒரு ஸ்பூன்,நறுக்கிய பச்சை மிளகாய் 1/2 ஸ்பூன்,சீரக தூள் 10 கிராம்,சாட் மசாலா  5 கிராம் உலர்ந்த மாம்பழ தூள்  5 கிராம் போட்டு கலந்து விட்டு வடைக்கு தட்டுவது போல் தட்டி வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கிடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் நெய் விடவும்,
  9. இப்போது நெய் சூடாகி விட்டது, தயார் செய்து வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக நெயில் போட்டு  பொரிக்கவும் இப்போது அடுப்பை சீம்ல் வைத்து பொன்னிறமாக பொரிக்கவும் திருப்பி போட்டு  பொரித்து எடுக்கவும்.
  10. சுவையான சிக்கன் ஷாமி கபாப் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago