முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடக்கம்: மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      தமிழகம்
Anbil 1

சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேர் எழுதுகின்றனர். அந்த வகையில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுத உள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அறிவுறுத்தல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும். அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா தேர்வு அறைக்கு வாங்க. மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து