முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பூசணிக்காய் அல்வா

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

பூசணிக்காய் அல்வா செய்யத் தேவையான பொருள்கள்;

 

  1. பூசணிக்காய் - 1/2 கிலோ.
  2. நெய் - 2 ஸ்பூன்.
  3. சர்க்கரை - 1/2 கப்.
  4. கலர் பொடி - சிறிதளவு.
  5. முந்திரி பருப்பு - 10.
  6. திராட்சை -10.
  7. ஏலக்காய் -4.

 

Method: 

 

பூசணிக்காய் அல்வா செய்முறை:-

பூசணிக்காய்யை சுத்தம் செய்து  நறுக்கி  தோல் சீவி  துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

4 ஏலக்காய்யை எடுத்து அதை மிக்சியில் போட்டு  அரைத்து வைத்துக்கொள்ளவும் கொள்ளவும். 

அடுப்பில் கிடாய் வைத்து 2  ஸ்பூன் நெய் ஊற்றவும்.

நெய் சூடானவுடன் 10 முந்திரி பருப்பு மற்றும் 10 திராட்சையை போட்டு பொன்னிறமாக  வறுத்து   ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மீதமுள்ள நெயில் பூசணிக்காய் துருவலை போட்டு பச்சை வாசனை போகும்வரை  5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

5 நிமிடம் மூடி போட்டு மூடி குறைவான தணலில் நன்றாக வேக விடவும்.

1/2 கப் சர்க்கரையை போட்டு கிண்டி விடவும்.

மிக்சியில்அரைத்து வைத்துள்ள ஏலக்காய் பொடியை போட்டு கலந்து விடவும்.

வறுத்து வைத்துள்ள 10 முந்திரி பருப்பு மற்றும் 10 திராட்சையை போட்டு கிண்டி விடவும்.

கலர் பொடி சிறிதளவு போட்டு  குறைவான தணலில் அடிபிடிக்காமல் கலந்து விடவும். 

தொடர்ந்து குறைவான தணலில் அடிப்பிடிக்காமல் கிண்டி விடவும்.

இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்

சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago