முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஹனி சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

ஹனி சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் துண்டுகள் - 3. (நெஞ்சு கறி)
  2. தேன் - 2 ஸ்பூன்.
  3. மிளகு தூள் - 2 ஸ்பூன்.
  4. மைதா மாவு - 3/4 கப்.
  5. பட்டர் - 2 ஸ்பூன்.
  6. நெய் - 2 ஸ்பூன்.
  7. பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்.
  8. பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு.
  9. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1.
  10. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்.
  11. வினிகர் - 2 ஸ்பூன்.
  12. சோயா சாஸ் - 3 ஸ்பூன்.
  13. மல்லி இலை - சிறிதளவு.
  14. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 3  சிக்கன்  துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 ஸ்பூன் மிளகுத்துளை போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் முக்கால் கப்  மைதாமாவை எடுத்துக்கொண்டு தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு சிக்கன் துண்டின்  எல்லா பக்கங்களிலும் மைதா மாவு ஒட்டும்படி பிரட்டி எடுத்து  தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் பட்டர் மற்றும் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  4. பட்டர் மற்றும் நெய் சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள சிக்கன்  துண்டுகளை போட்டு பொரிக்கவும்.
  5. திருப்பி திருப்பி போட்டு சிக்கன்  துண்டுகளை நன்றாக பொரிக்கவும்.
  6. இதனுடன் பொடியாக நறுக்கிய 3 பல் பூண்டு,பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய்,தேன் 2 ஸ்பூன்,மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்,வினிகர் 2 ஸ்பூன்,சோயா சாஸ் 3 ஸ்பூன்,1/2 ஸ்பூன் மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் நெய் 1/2 ஸ்பூன் ஊற்றி சிக்கன்  துண்டுகளை நன்றாக பொரிக்கவும்.
  7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  8. சிறிதளவு மல்லி இலையை தூவி விட்டு சிக்கன்  துண்டுகளை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான ஹனி சிக்கன் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்