முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அவரைக்காயின் மருத்துவ பலன்கள்

 • தினமும் உணவில் அவரைக்காய்யை பொரியல், கூட்டு செய்து  சாப்பிடுவதால் நுரையீரல் சமந்தமான நோய்களில்  இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
 • அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய்யை சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள்  உறுதியாகும்
 • வெள்ளை அணுக்கள் மற்றும் சிகப்பு அணுக்கள் நன்கு செயல்பட அவரைக்காய் உதவுகிறது.
 • அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
 • அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. 
 • அவரைக்காய்யை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும். 
 • அவரைக்காய் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடும். 
 • அவரைக்காய் நுரையீரல் சமந்தமான நோய்களை சரி செய்து நுரையீரலை பாதுகாக்கிறது.
 • வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.அதனால் உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 • அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  
 • மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்.
 • முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய்  போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். 
 • .நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். 
 • தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். 
 • அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
 • உடல் எடையை கூட்ட  உருளைக்கிழங்குடன் அவரைக்காய்யை சேர்த்து சாப்பிட வேண்டும். 
 • அவரைக்காய் புற்றுநோய் உள்ளிட்ட. வேறு சில நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony