முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இஞ்சியின் மருத்துவ பயன்கள்

 

  1. இஞ்சியை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிடுவதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் சிறிது இஞ்சியை அரைத்து நீரில் கலந்து நெற்றியில் தடவ நல்ல பலன் கிடைக்கும்.
  2. இஞ்சியை அரைத்து எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடுவதால் இரத்த அழுத்த குறைபாடுகள் நீங்கும்.
  3. இஞ்சியை உணவில் சேர்த்து அடிக்கடி சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறு, தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.
  4. உணவிற்கு முன் இஞ்சித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன.
  5. இஞ்சி தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.
  6. சிறிதளவு இஞ்சியை உணவுடன் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கி, ஜீரண தன்மை மேம்படும்.
  7. மூட்டு பிரச்சனைகளின் சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி விளங்குகிறது.
  8. குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது.
  9. இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு  கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன்  செயல்பாடு அதிகரிக்கும்.
  10. பல்வலி இருக்கும்போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும்.
  11. இஞ்சி இருமல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
  12. இஞ்சியை உடலின் நுண்ணிய பாதைகளை சுத்திகரிப்பதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்
  13. மூட்டு வலிகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் இஞ்சி தீர்வாக அமைகிறது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்