முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காளான் மருத்துவ பலன்கள்

  • சிப்பிக் காளான்,முடக்கு காளான்,முட்டு காளான்,படர் காளான்,என பலவகையான காளான்கள் உள்ளன.
  • இயற்கை மற்றும் செயற்கை என இரு வகை காளானில் இயற்கை காளானில் புஞ்சை வகை காளான் விஷ தன்மை உள்ளதால் அதனை தவிர்க்க வேண்டும். 
  • காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
  • காளானை பொறித்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிட்டால் பயன்கள் அதிகமாக கிடைக்கும்.
  • சிப்பிக் காளான் மற்றும் முட்டு காளானில் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளது.
  • முடக்கத்தான் கீரையுடன் காளான் சேர்த்து வேக வைத்து உடன் சீரகம் மற்றும் மஞ்சள் பொடி கலந்து அருந்த மூட்டுவலி தீரும்.
  • அசைவ பிரியர்கள் அசைவ உணவில் உள்ள ருசியை சிப்பிக் காளான் மற்றும் முட்டு காளானில் கிடைக்க பெறுகிறார்கள்.
  • காளான்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
  • நீரிழிவு நோயாளிகளுக்கும் காளான் மிகவும் நன்மை பயக்கும்.
  • காளான்களை உட்கொள்வதால் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
  • இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை காளான் சீர்செய்யும்.
  • பெண்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் கருப்பை நோய்கள் காளான் குணப்படுத்துகிறது.
  • காளான் மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
  • காளான் உட்கொள்வதால் கால்வலி குறையும்,ரத்த அளவு கூடும்.
  • உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
  • காளான் உட்கொள்வதால் பற்கள், நகங்கள், தலைமுடிகள் எலும்புகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.
  • காளான்களை உட்கொள்வதால் கால்வலி குறையும்,ரத்த அளவு கூடும்.
  • காளான் உட்கொள்வதால் கணையம், கல்லிரல்,மண்ணீரல் பலப்படும்.
  • சளி குறைய  முட்டு காளான் 100 கிராம் எடுத்து 2லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் போட்டு 5 முதல் 7 நிமிடம் வேக வைத்து  காளானை வடிகட்டி எடுத்து நீரை கொட்டி விட்டு,மீண்டும் 500 மில்லி நீரில் போட்டு 250 மில்லி வரும் வரை வேக விட்டு உடன் சீரகம், மிளகு, திப்பிலி, தான்தோன்றிக்காய் ஆகியவற்றை இடித்து போட்டு குடித்தால் சளி தீரும்.
  • காளான்களை உட்கொள்வதால் முடி நன்கு வளரும்,கேரட் உடன் சேர்த்து சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும்.
  • பருத்தி பாலில் காளானை போட்டு வேக வைத்து அருந்தினால் இளைப்பு மற்றும் ஈரல் நோய் குறையும்.
  • நாட்டு நிலக்கடலை மற்றும் பேரிச்சம் பலத்துடன் காளான்களை சாப்பிட ரத்த அணுக்கள் கூடும்.
  • காளான்களை உட்கொள்வதால் பல் கூச்சம் மற்றும் பல் குறைபாடுகள் தீரும்.
  • சிப்பி காளானை அரிசி மாவில் கலந்து இட்லி போல் வேக வைத்து சாப்பிட அதிக பயன் தரும்.
  • காளானை சாப்பிட்ட பின்னர் சீரக நீர் அருந்த வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.
  • வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காளானில் உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக காளான் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்