முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூல நோயை குணப்படுத்த எளிய வீட்டு மருத்துவம்

  1. தவறான உணவுப்பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை பழக்கத்தால் மூல நோய் வருகிறது.
  2. மூல நோய் உள் மூலம், வெளி மூலம் என இரு வகைப்படும். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு வெளியே வளரும்.
  3. மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் மூலம் ஏற்படும்.
  4. மூல நோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல்,  உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
  5. நாள்பட்ட மலச்சிக்கல் காரணமாக மூல நோய் வரலாம்.
  6. மூல நோய் இருந்தால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
  7. மாத்திரை இல்லாமல் இயற்கை முறையில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாதுகாப்பானது.
  8. மூல நோய் உள்ளவர்கள், தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். உடலில் போதிய அளவில் தண்ணீர் இருந்தால் தான், அவை குடலியக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாமல், மலம் எளிதாக வெளியேற உதவி புரியும்.
  9. காரமான உணவு,குறைந்த நார்ச்சத்து உணவுகள், வறுத்த உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், காஃபின் கலந்த பானங்கள் மற்றும் சாக்லேட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  10. உணவுகள் எளிமையானதாக இருக்கட்டும். எளிதில் செரிமானமாகும் உணவுகளாக இருக்கட்டும்.
  11. நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதை அதிகரிக்கவும்; பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை உணவில்  சேர்த்துக் கொள்ளுங்கள் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்