எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.27 - தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறை பிரச்சினை நவம்பருக்குள் முன்னேற்றம் ஏற்படும். 2013-க்குள் முழுவதும் தீர்க்கப்படும். இந்த பிரச்சினைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை வருமாறு:-
அன்பார்ந்த தமிழக மக்களே, உங்களுக்காக நான் என்பது மட்டுமல்லாமல், உங்களால் நான் என்ற உணர்வோடு உங்களின் அடிப்படைத் தேவைகளையும்; தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக நான் செயல்பட்டு வருகிறேன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்குவது, மின்சாரம். மின்சாரத்தின் தேவை என்பது சுவாசிக்கும் காற்றைப் போல இன்றியமையாததாக விளங்குகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத்தை, தட்டுப்பாடின்றி பெற முடியாமல் நீங்கள் எல்லாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இது மிகவும் வருந்தத் தக்கது. இதற்கு நானோ, எனது தலைமையிலான அரசோ, காரணமல்ல என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கான காரணங்கள், மற்றும் அதைப் போக்குவதற்காக நான் எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பற்றி உங்களுடன் சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது முந்தைய ஆட்சிக் காலங்களில், அதாவது 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக் காலத்திலும்; மற்றும் 2001 முதல் 2006 வரையிலான ஆட்சிக் காலத்திலும், மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல், மின்சாரம் சீராக அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டு வந்தது. 2006 ஆம் ஆண்டு நான் ஆட்சியை விட்டுச் சென்ற போது, தமிழ்நாடு மின்சாரத்தில் உபரி மாநிலமாகத்தான் இருந்தது. இது மட்டுமல்லாமல், உபரியாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் வேறு மாநிலங்களுக்கு விற்கப்பட்டு, அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டது.
2006-ல் நாங்கள் ஆட்சியில் இருந்தவரை, தமிழ்நாடு மின்சாரத்தில் உபரி மாநிலமாக இருந்தாலும், எதிர்காலங்களில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதை உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையோடு, நான் ஆட்சியில் இருக்கும் போதே பல பெரிய மின் உற்பத்தித் திட்டங்களைத் தீட்டி, அவற்றிற்குத் தேவையான ஆயத்த பணிகளை செய்ய நான் நடவடிக்கை எடுத்தேன். அந்த நேரத்தில் தேர்தல் வந்தது; ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2006-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. அரசு, நாங்கள் ஆரம்பித்து வைத்த புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கான பணிகளை, அதே உத்வேகத்துடன் தொடர்ந்திருந்தால், 2006-2011 வரையிலான காலகட்டத்தில் பல புதிய மின் நிலையங்கள் செயல்படத் துவங்கியிருக்கும். தமிழகத்திற்குத் தேவையான மின்சாரம் தங்குதடையின்றி கிடைத்திருக்கும். ஆனால், இதைச் செய்ய முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு தவறிவிட்டது. அதாவது, எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு, நாங்கள் தொடங்கி வைத்த புதிய மின் திட்டங்களுக்கான பணிகளை அதே வேகத்துடன் தொடராமல், வேண்டுமென்றே, கருணாநிதி தலைமையிலான முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு மெத்தனமாக இருந்துவிட்டது. இது கருணாநிதியால் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட முதல் துரோகமாகும். 2006 ஆம் ஆண்டு நான் ஆட்சியை விட்டுச் சென்ற போது, தமிழகத்தின் மின் நிறுவு திறன், 10,100 மெகாவாட்டாக இருந்தது. 1991 முதல் 1996 வரையிலான எனது முதல் ஆட்சிக் காலத்தில், ஒட்டுமொத்தமாக 1,302 மெகாவாட் மின் நிறுவு திறன் சேர்க்கப்பட்டது. 2001 முதல் 2006 வரையிலான எனது 2வது ஆட்சிக் காலத்தில் ஒட்டுமொத்தமாக 2,518 மெகாவாட் மின் நிறுவு திறன் சேர்க்கப்பட்டது. ஆனால், 2006 முதல், 2011 வரையிலான முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், கூடுதலாக, வெறும் 206 மெகாவாட் மின் நிறுவு திறன் மட்டுமே சேர்க்கப்பட்டது. எதிர்காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என்பது தெரிந்து இருந்தும், ஒரு புதிய பெரிய மின் உற்பத்தி திட்டத்தை நிறுவி அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகாலம் பிடிக்கும் என்பது புரிந்து இருந்தும், புதிய மின் திட்டங்களை தொடங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முந்தைய கருணாநிதி அரசு வெறும் 206 மெகாவாட் மின் நிறுவு திறனை மட்டுமே சேர்த்தது. அதே சமயத்தில், இயற்கையாகவே தமிழகத்தின் மின்சாரத் தேவை அதிகரித்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை 12,000 மெகாவாட் என்ற நிலை உருவாகியுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாததால், தமிழகத்தின் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து, நிர்வாகத் திறமையின்மையால் மின் உற்பத்தி குறைந்தது. ஒட்டுமொத்தமாக 4,000 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இந்த மின் பற்றாக்குறையை ஈடு செய்ய, புதிய மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை.
மேலும், நீண்டகால அடிப்படையில் வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், வாங்கப்படும் மின்சாரத்தின் விலை குறைவாக இருந்திருக்கும். தமிழகத்திற்குத் தேவையான மின்சாரம் இப்போதும் கிடைத்திருக்கும். ஆனால் அவ்வாறு, நீண்டகால அடிப்படையில் முந்தைய தி.மு.க. அரசு மின்சாரத்தை வாங்வில்லை. குறுகிய கால அடிப்படையில், அதிக விலையில், மின்சாரம் வாங்கப்பட்டது. அதாவது, வேண்டுமென்றே, சுய நல நோக்கத்துடன் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திட்டமிட்டே குறைக்கப்பட்டது. இது கருணாநிதி செய்த இரண்டாவது துரோகம். இதனால் தமிழ்நாடே இருளில் மூழ்கியது. இந்தத் தருணத்தில் தான், 2011-ல் மீண்டும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. நீங்கள் எங்களுக்கு வாக்களித்தீர்கள். உங்கள் ஆதரவுடன் எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை 2011 ஆம் ஆண்டு ஏற்றது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலைமை அதல பாதாளத்தில் இருந்தது. இதுவரை தமிழக அரசின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, 40,375 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி, கடும் கடன் சுமைக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு ஆளாக்கி விட்டுச் சென்றது. இதன் காரணமாக, இனிமேல் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, கடன் எதுவும் கொடுக்கக் கூடாது என வங்கிகளுக்கு பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் தான் நான் மீண்டும் முதலமைச்சரானேன். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலைமையை சீர் செய்வதற்கு ஏதுவாக, மிக இக்கட்டான பொருளாதார நெருக்கடியிலும் கூட, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குத் தேவையான நிதியை தாராளமாக வழங்கி, தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை சீர் செய்ய பகீரத முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகிறேன்.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி குறைவாக இருந்தால், வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டினை போக்கலாமே என்று பலரும் ஆலோசனை கூறுகிறார்கள். இதில் உள்ள நிலைமையை உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி குறைந்து இருப்பதை அறிந்த நான், வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டினை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன். முதற்கட்டமாக, குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும், மின் தொடரமைப்பில் உள்ள நெருக்கடி காரணமாக, மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கியும் தமிழகத்திற்கு கொண்டு சேர்க்க வழியில்லாத நிலை தான் தற்போது உள்ளது. அரிசி பற்றாக்குறை என்றால், அரிசி மூட்டைகளை ரயில் மூலம் கொண்டு வரலாம். குடிநீர் பற்றாக்குறை என்றால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு தண்ணீரை டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு சென்று விநியோகிக்கலாம். தேவைக்கேற்ப இவற்றை சேமித்தும் வைக்கலாம். ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு மின்சாரத்தை கொண்டு வர வேண்டுமானால், அதற்கு
சிஙுஹடூஙூஙிடுஙூஙூடுச்டூ ஷச்ஙுஙுடுக்ஷச்ஙு எனப்படும் வழித்தடம், மின் தொடர் பாதை, அதாவது மின்சாரம் பாய்கின்ற பாதை தேவை. அந்தப் பாதை, அதாவது சிஙுஹடூஙூஙிடுஙூஙூடுச்டூ ஷச்ஙுஙுடுக்ஷச்ஙு போதுமான அளவுக்கு இல்லை என்பதால், குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தாலும், வழித்தடம் சிறிதாக உள்ளதால், 235 மெகாவாட் மின்சாரம் தான் கொண்டுவர முடிந்தது. அனைவரும் இதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சிஙுஹடூஙூஙிடுஙூஙூடுச்டூ ஷச்ஙுஙுடுக்ஷச்ஙு அதாவது மின் வழித்தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் இருக்கிறது. வட மாநிலங்களுக்கு எல்லாம் பெரிய அளவில், போதுமான அளவுக்கு சிஙுஹடூஙூஙிடுஙூஙூடுச்டூ ஷச்ஙுஙுடுக்ஷச்ஙு ஏற்படுத்திக் கொடுத்த மத்திய அரசு, அத்தகைய சிஙுஹடூஙூஙிடுஙூஙூடுச்டூ ஷச்ஙுஙுடுக்ஷச்ஙு-ஐ அமைக்காமல், தென் மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டைப் புறக்கணித்துவிட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பேர் மத்திய அமைச்சரவையில் இருந்து இருக்கிறார்கள். கடந்த 16 ஆண்டு காலமாக, இடையில் ஓர் ஆண்டைத் தவிர, தி.மு.க. தொடர்ந்து 15 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள்? இத்தனை ஆண்டு காலமாக மத்திய அமைச்சர்களாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ்காரர்கள், தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பயனளிக்கக் கூடிய சிஙுஹடூஙூஙிடுஙூஙூடுச்டூ ஷச்ஙுஙுடுக்ஷச்ஙு -ஐ அமைத்துத் தர முடியவில்லையா? அதற்கு வழியில்லையா? வகை இல்லையா? அவர்கள் நினைத்திருந்தால், எப்போதோ செய்து முடித்து இருக்கலாம். செய்ய மனமில்லை என்பது தான் உண்மை.
கடந்த 2011 மே மாதம் நான் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, பாரதப் பிரதமரிடம் இங்கே இருக்கின்ற கடுமையான மின் பற்றாக்குறை நிலைமையை எடுத்துச் சொல்லி, ஓராண்டு காலத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். திரும்பத் திரும்ப இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கேட்டுப் பார்த்தேன். ஆனால், அதை மத்திய அரசு வழங்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய காங்கிரஸ் அமைச்சர்களோ இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்து, பிரதமரிடம் பேசி, இந்த மின்சாரத்தை வழங்க ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? தமிழக மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் தி.மு.க. மத்திய மந்திரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள், தங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு, இதையாவது செய்தார்களா? இதையாவது செய்யக் கூடாதா? ஆனால் செய்யவில்லையே! காவேரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, மண்ணெண்ணெய் பற்றாக்குறை பிரச்சினை போன்ற இன்னும் எத்தனையோ பிரச்சினைகளை ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள். இன்று தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்று குற்றம் சாட்டும் தி.மு.க.காரர்களும், காங்கிரஸ்காரர்களும், குறிப்பாக 15 ஆண்டு காலமாக, மத்திய ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டுள்ள தி.மு.க.வினர், தமிழ்நாட்டிற்காக மின்சாரத் துறையில், என்ன உதவி செய்தார்கள்? எதுவும் செய்யவில்லையே! இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இத்தனை ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த தி.மு.க.வினர், இதை எப்போதோ செய்து முடித்து இருக்க முடியும். ஆனால், இதில் அவர்கள் துளியும் அக்கறை காட்டவில்லை. இதனால் தான், இன்று இந்த மின் பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கு யார் காரணம்? காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசும் தான் இதற்கு முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். நாம் கோரிய 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு வழங்கவில்லை. டெல்லி மாநிலம், தனக்குத் தேவையில்லை என்று ஒப்படைத்திருக்கும் 1,721 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று பாரதப் பிரதமருக்கு சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தேன். ஆனால் அதற்கும் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. சரி, நாமே நம் மக்களுக்காக வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கலாம் என்று 1,100 மெகாவாட் அளவுக்கு, ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளோம். ஆனால், மின் தொடர் பாதை நெருக்கடி காரணமாக வெறும் 85 மெகாவாட் அளவுக்கு தான் மின்சாரம் பெற முடிகிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு இப்போது புரிகிறதா? இருப்பினும் இத்தனை சிரமங்கள், முட்டுக்கட்டைகள், சோதனைகள், தடைக்கற்கள் இருந்தாலும்; மத்திய அரசின் ஒத்துழைப்பு எந்த வகையிலும் இல்லை என்றாலும்; என் மீது நம்பிக்கை வைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்திய உங்களை காப்பாற்ற வேண்டும்; உங்களின் மின் தேவையை நிறைவு செய்ய வேண்டும்; உங்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்பதற்காக, நான் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
தற்போது, பல புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. நவம்பர் மாதம் முதல் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் ஒவ்வொன்றாக செயல்படத் துவங்கும். கடுமையான நிலையை எட்டியுள்ள மின்வெட்டு, இனி படிப்படியாக சீரடைந்து, நவம்பர் மாத இறுதிக்குள் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2013 ஆம் ஆண்டு இறுதிக்குள், மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன். எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு நம்மை வஞ்சித்தாலும், உங்களின் துணையுடன், எல்லாம் வல்ல இறைவனின் அருளால், தமிழகத்தை இருள் சூழ்ந்த நிலையில் இருந்து மீட்டெடுப்பேன். ஒளிமயமான தமிழ்நாட்டை மீண்டும் காண்போம். மிக விரைவில் தமிழ்நாட்டு மக்களின் மின் தேவை ர்த்தி செய்யப்பட்டு, மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக தமிழ்நாடு மறுபடியும் திகழும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விடை பெறுகிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
அய்யா வைகுண்டர் 194-வது அவதார நாள்: தமிழ்நாடு கவர்னர் ரவி வாழ்த்து
04 Mar 2026சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
04 Mar 2026தங்கம் விலை நேற்று 2-வது நாளாக குறைந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கு விற்பனையானது.
-
தஞ்சையில் விஜய்யை பார்க்க ஆர்வம்: சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
04 Mar 2026தஞ்சாவூர், த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
-
ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
04 Mar 2026தஞ்சாவூர், ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
-
ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Mar 2026சென்னை, ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்
04 Mar 2026மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக, நகை காணாமல் போனதாகப் புகாரளித்த புகார்தாரரான நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்த
-
மிக நீண்ட போருக்கு தயார்: ஈரான்
04 Mar 2026தெஹ்ரான், நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
நாங்குநேரி இரட்டைக்கொலை; காவல்துறை விசாரணை தீவிரம்: இதுவரை 7 பேர் கைது
04 Mar 2026திருநெல்வேலி, நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.
-
த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம்: தஞ்சை கூட்டத்தில் விஜய் ஆவேசம்
04 Mar 2026தஞ்சை, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம் என்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
-
போர் பதற்றம் எதிரொலி: 3 - வது நாளாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
04 Mar 2026மும்பை, போர் பதற்றம் காரணமாக நேற்று 3-வது நாளாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
04 Mar 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று தி.மு.க.
-
தஞ்சை கூட்டத்தில் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்
04 Mar 2026தஞ்சை, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கொல்லப்படுவார்: இஸ்ரேல் எச்சரிக்கையால் பரபரப்பு
04 Mar 2026ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகன் மோஜ்தபா கமேனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
04 Mar 2026சென்னை, மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லையில் இன்று அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
04 Mar 2026நெல்லை, நெல்லையில் இன்று நடக்கும் அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் பலியான கமேனியின் உடல் சொந்த ஊரான மஷ்ஷாத்தில் விரைவில் அடக்கம்
04 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் மதகுரு அயத்துல்லா அலி கமேனி உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
04 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
-
மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை போட்டி
04 Mar 2026சென்னை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.
-
ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மறுப்பு: ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை துண்டித்த டொனால்ட் ட்ரம்ப்
04 Mar 2026நியூயார்க், ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவ மறுத்த ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை தூண்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
சிவகங்கை தொழிற்பேட்டையில் அமைக்கிறது எம்.ஆர்.எப்.-ன் ரூ.5,300 கோடி மதிப்பிலான புதிய டயர் தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
04 Mar 2026சென்னை, தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தி பெயரை அகற்ற ஒப்புதல்
04 Mar 2026திருச்சி, திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்த நிலையில், பெயரை மாற்ற ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.&nb
-
சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை மாணவியின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர்
04 Mar 2026சென்னை, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்க
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Mar 2026- கோவை கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
- ஆழ்வார ்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
- காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை
- காங்கேயம் முருகன் விடயாற்று உற்சவம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Mar 2026


