முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் - 56 மந்திரிகள் சொத்துக் கணக்கு காட்டவில்லை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, செப். 10 - மத்திய மந்திரி சபையில் 76 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பிரதமர் உட்பட 56 மந்திரிகள் 2012-13 க்கான சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதுவரை 19 மந்திரிகள் மட்டுமே கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 

பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இது தவிர 56 மந்திரிகளும் நடப்பாண்டுக்கான சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. மத்திய நிதிமந்திரி ப. சிதம்பரத்தின் சொத்து மதிப்பு 11.96 கோடியில் இருந்து 12.70 கோடியாக உயர்ந்துள்ளது. இவரது மனைவி நளினியின் சொத்து மதிப்பு 17.79 கோடியில் இருந்து 19.48 கோடியாக உயர்ந்துள்ளது. 

மத்திய மந்திரி சரத்பவாரின் சொத்து மதிப்பு 7.86 கோடியில் இருந்து 8.75 கோடியாக உயர்ந்துள்ளது. இவரது மனைவியின் சொத்து மதிப்பு மட்டும் 13.46 கோடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய மந்திரி வீரப்ப மொய்லியின் மனைவியின் சொத்து மதிப்பு 3.08 கோடியில் இருந்து 3.10 கோடியாக அதிகரித்துள்ளது. வீரப்ப மொய்லிக்கு ரூ. 25.55 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் அனைத்து மந்திரிகளின் சொத்துக்களும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போல் தாக்கல் செய்யப்படாத மந்திரிகளின் சொத்து மதிப்பும் உயர்ந்திருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்