முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி வந்திருக்கும் ஒபாமாவின் அதிநவீன கார்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

புதுடெல்லி - குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக இன்று இந்தியா வரும் ஒபாமா பயணம் செய்யும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கார் அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்தது.
நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த  விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமாக பங்கேற்கிறார். இதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான  போலீசார், துணை ராணுவத்தினர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
டெல்லியின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லையில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. குடியரசு  தினவிழா வுக்கு இந்தியா வரும் ஒபாமா, இங்கு பயணம் செய்யும் வகையில் அதிநவீன  தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட கார், அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் கொண்டு  வரப்பட்டது.
 
இந்த கார் 8 டன் எடை கொண்டது. குண்டு துளைக்காத இந்த கார் 8 இன்ச் தடிமன் கொண்டது. காரின்  கதவுகள் விமானத்தின் கதவுகள் போன்று இருக்கும். உலகின் எந்தவொரு மூலையிலும் தொடர்பு  கொள்ளும் வசதிகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் தீ பிடிக்காத  வகையில் பெட்ரோல், டீசல் டேங்குகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. தீயணைப்பு கருவிகள்,  ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை உள்ளன.

இரவிலும்கூட தெளிவாக தெரியும் அதிநவீன  கண்காணிப்பு கேமராக்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காரில் 7 பேர் பயணம் செய்ய  முடியும். காரின் டயர்கள் பஞ்சர் ஆகாத வகையிலும், துப்பாக்கி  குண்டுகளால் சேதமடையாத தன்மை கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி  பெற்ற டிரைவர்கள் மட்டுமே இந்த காரை இயக்க முடியும்.
 
இத்தகைய சிறப்பு வாய்ந்த அதி நவீன கார் டெல்லி வந்துள்ளது. இது ஒரு நடமாடும் அதிபர மாளிகை என்று வர்ணிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து