முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுயஉதவி குழுக்களுக்கு தனிநபர் கடனுதவிகள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016      திருநெல்வேலி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்

nagai

நாகை மாவட்டத்தில் நில உரிமையாளர்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்கப்படுகிறது

கலெக்டர் சு.பழனிச்சாமி தகவல்

நாகப்பட்டினம்,டிச.21

தமிழக அரசால் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அரசாணையின்படி வருவாய் பின்தொடர் பணியின் கீழ் வருவாய் பதிவேடுகளில் இந்நாள் வரையிலான பதிவுகளை சரிசெய்து நில உரிமையாளர்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

பட்டா வழங்கப்படும்

     நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிரயம்ஸ பூர்வீகம் முலம் பாத்தியப்பட்ட வீடுகள்  மனைகள்  விவசாய நிலங்களுக்கும், நத்தம் புறம்போக்கு  நிலத்தில் வீடுகட்டி வசிப்பவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இப்பணி எதிர்வரும் 31.12.2016-க்குள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

     இத்திட்டத்தில் வழங்கப்படும்  பட்டாக்கள் இனிவரும் காலங்களில் முக்கிய ஆவணமாக கருதப்படும் என்பதால் இதுவரை பட்டா பெறாதவர்கள் தங்கள் சொத்துக்குரிய ஆவணங்களை சீர்காழி நகர நிலவரித்திட்ட வட்டாட்சியரிடம் ஆஜர்படுத்தி இத்திட்டத்தின் மூலம் புகைப்படத்துடன்  பட்டா பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.

4986 பட்டாக்கள்

   சீர்காழி நகராட்சியில் இதுவரை 4986 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 2489 நபர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் பட்டா வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே விசாரணைக்கு ஆஜராகாத நபர்கள் உரிய ஆவணங்களுடன் நகர நிலவரித்திட்ட வட்டாட்சியரை அணுகி பட்டா பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி   தெரிவித்துள்ளார்.

,..............................

தஞ்சாவூர் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில்

2  உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

 கலெக்டர் ஆ.அண்ணாதுரை  தகவல்

தஞ்சாவூர்,டிச.21

தஞ்சாவூர் மாவட்டம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள இரண்டு மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட அரசாணை எண்.44 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை (வு-2) நாள்.11.03.2015-ன் படியும், அரசாணை எண்.142 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (மு) நாள்.14.10.2009-ல் தெரிவிக்கப்பட்டுள்ள இனவாரி சுழற்சி அடிப்படையில் பொது பிரிவில் (முன்னுரிமை பெற்றவர்) ஒரு பணியிடமும், ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (முன்னுரிமை பெற்றவர்) ஒரு பணியிடமும் ஆக மொத்தம் இரண்டு மீன்வள உதவியாளர்  காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வலைகள்

இப்பதவிக்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை பின்வரும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.தமிழில் எழுதப் படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், மீன்பிடிக்க தெரிந்திருக்க வேண்டும், மீன்பிடி வலை  பின்னவும், அறுந்த வலைகளை சரிசெய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.மீன்துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இப்பதவிக்குரிய ஊதிய விகிதம்:  ரூ.4800-10000 + தரஊதியம் ரூ.1400பொதுப்பிரிவு முன்னுரிமை பெற்றவர் - 1நபர் வயது (18 முதல் 30 வரை)ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (முன்னுரிமை பெற்றவர்) -1 நபர் (18 முதல் 35வரை)

வருகிற 2ம் தேதி

     மேற்கண்ட பணியிடத்திற்கான தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மீன்துறை உதவி இயக்குநர், 873ஃ4 அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல் தஞ்சாவூர். தொலைபேசிஎண். 04362-235389 என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் 02.01.2017 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்முக தேர்வுக்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை,   தெரிவித்துள்ளார்கள்.

.............................

g

திருச்சி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும் அமைப்பு திறப்பு

திருச்சி,டிச.21

 திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில்  பொதுமக்களால் பெறப்படும் புகார்களுக்கு முழுமையான தீர்வுகான ஒருகிணைந்த புகார் கண்காணிக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் நேற்று(20,12,2016) திறந்துவைத்தார்கள், நிகழ்ச்சியில் நகரப் மாநகரப் பொறியாளர்  நாகேஸ், செயற் பொறியாளர்கள்  எஸ். செல்வம் ,  அமுதவள்ளி கலந்துகொண்டார்கள்.

புகார் பதிவு செய்தல்

மெசர்ஸ்.ஒய்.டி.ஆர்.டெக்னாலஜி நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும் அமைப்பு, பொதுமக்களால் பெறப்படும் புகார்களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்கும்.  இந்த அமைப்பில், புகார்களை பதிவு செய்தல், புகார்களுக்கு ஒப்புதல் வழங்குதல், முறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பு வழங்குதல், உயர் அதிகாரிகளுக்கு ஒப்படைத்தல், ஆய்வு செய்தல், அறிக்கை செய்தல் போன்ற  செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும்.  இந்த ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும்  அமைப்பில், பொதுமக்கள் இணையம்,  முகநூல், வாட்ஸ்அப் செயலி, ட்விட்டர் செயலி மற்றும் கால்சென்ட்டர் மூலமாக,  தொழில்நுட்பம் அறிந்தவராயினும், அறியாதவராக இருப்பினும், கல்வித்திறன் குறைவாக இருந்தாலும், எளிதில் புகார்கள் சமர்ப்பிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், பொதுமக்களுக்கு ஒரு அலுவலகத்துடன் வெவ்வேறு ரூபங்களில் தொடர்பு இருக்கும். உதாரணமாக, பொதுமக்களுக்கு குடிநீர் வரவில்i, குப்பைகள் அள்ளப்படவில்லை, மழைநீர் தேங்கியுள்ளது, பாதாளச் சாக்கடை அடைப்பு உள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், ஒப்பந்தக்காரர்களுக்கு, தாங்கள் மேற்கொண்ட பணிக்கு பட்டியலினைப் பெறுவதிலும், மற்றொருவருக்கு தெருநாய்கள் மூலம் தொல்லை என்ற பிரச்சினை இருக்கும். இவை அனைத்திற்கும்,  இந்த புகார் கண்காணிக்கும் அமைப்பில்  ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புகார்கள் பெறப்பட்டவுடன் உரிய ஒப்புதல் குறுஞ்செய்தி மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய புகார்கள் பெறப்பட்டுள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்வார்கள்.  புகார்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்கப்படாவிடின், உரிய தீர்வு காண்பதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும், இந்த அமைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

............................

g

திருச்சி மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி

 கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தலைமையில்

ஏற்பு

திருச்சி,டிச.21

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,   தலைமையில் நடைபெற்றது.    

நலப்பணி

மேலும், மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிலிருந்து ஆதரவற்ற மற்றும் எச்.ஐ.வி.யுடன் வாழும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.2,000ம் வீதம் மொத்தம் ரூ.6 இலட்சத்து 82 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் திங்களில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மைய கருத்து “புதிய எச்.ஐ.வி., தொற்றுகள் இல்லாத உலகம்”, “புறக்கணித்தல் இல்லாத உலகம், எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத உலகம்” என்பதாகும். அதன்படி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சுகாதாரத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், அரசின் பல்வேறு துறைகள் இணைந்து எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகையாக முதலமைச்சரின் சிறப்பு நிதியிலிருந்து ஆண்டுதோறும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000ம், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000-ம், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.5000 வீதம் இந்த அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியம்

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000- மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின்கீழ் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ரூ.1000- உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கும், முதியவர்களுக்கும் ஒய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

.

திருச்சியில் எச்.ஐ.வி நோயை கண்டறிய 33 நம்பிக்கை மையங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 4 சுகவாழ்வு மையங்கள் மற்றும்       1 இலவச சட்டஉதவி மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. ஏ.ஆர்.டி கூட்டு சிகிச்சை மையம் அண்ணல் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைகளிலும் 11 இணை கூட்டு சிகிச்சை மையங்களும் நமது மாவட்டத்தில் செயல்படுகிறது என்றார்.

  இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் லில்லிமேரி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் எஸ்.சௌந்திரராஜன், சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் (குடும்பநலம்) டாக்டர். எலிசபெத் மேரி, டாக்டர்.சாவித்திரி(காசநோய்), டாக்டர்.மணிவண்ணன், டாக்டர்.பிரியா, மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுபாட்டு அலகு மாவட்ட திட்டமேலாளர் இரா.செந்தில்குமார், மாவட்ட மேற்பார்வையாளர் இரா.செல்வகுமார் மற்றும் தன்னார்வளர்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

.............................

g

கரூர் மாவட்டத்தில் விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்குவதற்காக நடத்தப்பட்ட செய்முறை தேர்வு

 கலெக்டர் கு.கோவிந்தராஜ்  நேரில் ஆய்வு

கரூர்,டிச.21

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விலையில்லா தையல் இயந்திரங்கள் பெறுவதற்காக விண்ணப்பித்த பயனாளிகளில் தகுதியான நபர்களுக்கு நடைபெற்ற செய்முறை தேர்வினை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ்,  நேற்று (20.12.2016) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தையல் எந்திரங்கள்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தையல் தொழில் தெரிந்தவர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்குவதற்காக தையல் தொழில் தெரிகிறதா என்று தையல் இயந்திரங்கள் மூலம் செய்முறை தேர்வு இன்று (20.12.2016) நடத்தப்பட்டு தெரிவு செய்யப்படும் அனைவருக்கும் விரைவில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது.  இந்த தையல் இயந்திரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.  மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தையல் தொழில் தெரிந்தவர்கள் உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தால் உடனடியாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

..............................

g

 மன்னார்குடி நகராட்சிகுட்பட்ட குளங்களில் கலெக்டர் இல.நிர்மல் ராஜ்  நேரில்  ஆய்வு

திருவாரூர்,டிச.21

   திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிகுட்பட்ட தாமரைகுளம், நல்லதண்ணீர் குளம், நாகமுடியார்குளம், செட்டி குளம் ஆகிய குளங்களை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உத்தரவு

      மன்னார்குடி நகராட்சிகுட்பட்ட தாமரைகுளத்தின் கரையோர பகுதிகளில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குப்பைகள் அகற்றுவதை பார்வையிட்டு ,பொதுமக்கள் குளங்களின் கரையோரங்களில் குப்பைகள் மற்றும் தனியார் உணவகக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரை அறிவுறுத்தினார். தொடர்ந்து சட்டுருட்டி வாய்க்காலை பார்வையிட்டு , வாய்க்காலை தூர்வார வேண்டும் எனவும், சாலையோரங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

      பின்னர் நல்லத்தண்ணீர் குளம் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டு குளத்தில் தூர்வாரப்பட்டுள்ள அளவுகள் குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து மேலவாசல் நாகமுடியார்குளம்,செட்டிகுளம் ஆகிய குளங்களையும் , கரையோரப்பகுதிகளையும் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ்  ஆய்வு செய்தார்.

  இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ட்டி.மோகன்ராஜ் வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகணன், நகராட்சி ஆணையர் இளங்கோவன், வட்டாட்சியர் மலர்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.........................

g

 சிறுவாச்சூரில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

 பொதுமக்கள்  ஆர்வத்துடன் கண்டு வியந்தனர்

பெரம்பலூர்,டிச.21

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் நேற்று (20.12.2016) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

புகைப்பட கண்காட்சி

இக்கண்காட்சியில்  அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்;ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை சிறுவாச்சூரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இப்புகைப்படக் கண்காட்சியினை; சிறுவாச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச்சென்றனர்.

      இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அ.பாரதி, மு.சுதாகர் மற்றும்  செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

..............................

g

திருச்சியில்செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்

அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்

திருச்சி,டிச.21

 திருச்சி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று(20.12.2016) செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

புதிய திட்டங்கள்

அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகள் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்கள், திருவிழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

இப்புகைப்படக் கண்காட்சியில்  முன்னாள் முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான பசுமை வீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், பெண்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர், விலையில்லா அரிசி, தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குதல், அம்மா உணவகம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட விபரங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

 இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் பார்வையிட்டனர்.

............................

g

அரியலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் எ.சரவணவேல்ராஜ்,   நேரில் ஆய்வு

அரியலூர்,டிச.21

அரியலூர் மாவட்டடத்தில் கனரக வாகனங்கள் வேகத்தினை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலைகளிலும், தேசிய நெடுஞ்சாலையில் இணையும் கிராமப்புறச் சாலை முகப்புகளிலும்; வேகத்தடை அமைக்கப்பட்டதையும், புதிதாக வேகத்தடை அமைத்திடவும், சாலையோரங்களிலுள்ள முட்புதற்களை அகற்றுவதற்கும் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ்,   நேற்று (20.10.2016) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நடவடிக்கை

இதுக்குறித்து மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது :-

அரியலூர் மாவட்டத்தில் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால், இவ்வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், விபத்து இல்லா பயணத்தை உறுதிசெய்யும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் - ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணாநகர் நேருந்துநிறுத்தம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், விளாங்குடி ஆகிய இடங்களில் புதிதாக வேகத்தடை அமைக்கவும், தேசி நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் உள்ள முட்புதற்களை அகற்றவும், வி.கைகாட்டியிலுள்ள பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கவும், தேசிய நெஞ்சாலைத்துறை பொறியாளர் மற்றும் வளர்ச்சித்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ்,   தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (அரியலூர்) கபிலன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

...............................

coop

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில்

உறுப்பினர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் விழா

பெரம்பலூர்,டிச.21

      பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில்2015-2016-ம் ஆண்டு பால் கறவை செய்தவற்களை ஊக்குவிக்கும் விதமாக கூடுதல் கொள்முதல் விலை தொகையாக லிட்டர் 1-க்கு 0.70 பைசா வீதம் கூடுதல் லிட்டர் 2501105.5-க்கு கூடுதல் தொகை ரூபாய்.1750773.85-ம் வழங்க துணைப்பதிவாளர் ( பால் வளம்) பெரம்பலூர்  அனுமதி ஆணை வழங்கி உள்ளார்கள்.

அதன்படி ஊக்கத் தொகை வழங்கும் இந்த விழாவில் தலைவர் ரா. செல்வராஜ், துணைத் தலைவர் ரா.செல்வி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் P.ராமக்கிரு~;ணன்,.மு.ரெங்கர், ஆ.தங்கராஜீ, ஆ.அன்பழகன், ஊ.மணிவேல்,வெள்ளைசாமி, யு.சரோஜா, பு.செல்வி, யு.முத்துலெட்சுமி மற்றும் துணைப் பதிவாளர் ந.கண்ணன், ஆவின் துணை மேலாளர் அன்பழகன், விரிவாக்க அலுவலர் புகழேந்தி  மற்றும் சங்க செயலாளர் பாண்டியன், அலுவலக பணியாளர்கள் கண்ககர் உதயகுமார், எழுத்தர்கள் நீலமேகம், துரைராஜ், சு.மருதைவீரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

........................

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் ரூ.43 லட்சம்          மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்

கலெக்டர் சு.கணேஷ்,   ஆய்வு

புதுக்கோட்டை,டிச.21

 புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ்,  நேற்று(20.12.2016) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:தமிழகஅரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், வேட்டனூர் ஊராட்சி, வேட்டனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.22.399 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் நடவு செய்தல் பணியையும்,  முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பசுமைவீடு கட்டுமான பணியையும், பலவரசன் ஊராட்சி, பலவரசனில் ஒன்றியப் பொது நிதியின் கீழ் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள ஆழ்துளை கிணறு பணியையும் என மொத்தம் ரூ.4349900 மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

இந்த ஆய்வின் போது மரக்கன்றுகளை சாலையோரங்கள், குளங்கள் மற்றும் கண்மாய்களில் நட்டு வளர்த்து தினமும் நீர் ஊற்றி பராமரிக்கவும், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களைக் கொண்டு விரைவாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ்,  கூறினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர்  ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், வேட்டனூர் மற்றும் எசைமங்களம் கிராமங்களில் விவசாயிகளால் நடவு செய்யப்பட்டு நீரின்றி வறண்டு கிடக்கும் நெல் வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

.............................

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago