முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.கபொதுச்செயலாளராக சசிகலா தேர்வு ஊட்டியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      நீலகிரி
Image Unavailable

 

அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து ஊட்டியில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

 

அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத்தின் பொதுச்செயலாளராக சின்னம்மா(சசிகலா) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

 

இந்த நிலையில் ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் ஜெ.பேரவை நகர செயலாளர் கே.சந்திரன் தலைமையில், பாசறை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

 

நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் லோகநாதன், பொருளாளர் மகேஷ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன், கவுன்சிலர் ஆல்போஜன், பாசறை நகர செயலாளர் அக்கீம் பாபு, விசாந்த், தம்பி வில்சன், ராஜேந்திரன், நாராயணன், மோகன், ஆட்டோ சண்முகம், ராஜா, மஞ்சுநாத், பூ ஸ்ரீதர், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதேபோன்று குன்னூரில் மாவட்ட திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் சையது முபாரக் தலைமையில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்தும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் கழக விவசாய பிரிவு துணை செயலாளர் பாரதியார், பாசறை மாவட்ட இணை செயலாளர் கரன்சி சிவக்குமார், கவுன்சிலர் டைகர்ஹில் மணி, அழகுராஜ், தலைமை கழக பேச்சாளர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago