மாடுகள் திருடிய 3 பேர் கும்பல் கைது

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஈரோடு

மொடக்குறிச்சி உட்பட, தமிழகம் முழுவதும் மாடுகள் திருடிய மூன்று பேர் கும்பல் சிக்கியது.-  மொடக்குறிச்சி, கணபதிபாளையம் அடுத்தசின்னம்மாபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 57 கடந்த அக்12ல், இவர் தோட்டத்து கொட்டகையில் கட்டியிருந்த ஒன்பது மாடுகள், இரண்டு கன்றுகளை மர்ம ஆசாமிகள் லாரியில் கடத்தி சென்றனர். மலையம்பாளையம் போலீசார், திருட்டு கும்பலை தேடி வந்தனர்.இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் போலீசில், வேடசந்துார் சேகர், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் சிக்கினர். விசாரணையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாடு திருடியது தெரிய வந்தது. சின்னம்மாபுரத்திலும் திருடியதை ஒப்புக் கொண்டனர்.இவர்களுக்கு, மலையம்பாளையத்தை அடுத்த, காவல்காரன்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் மதன்குமார், 20, உடந்தையாக இருந்தது தெரிந்தது. அவனை  கைது செய்தனர்.வழக்கில் மேலும் ஐவர் சம்பந்தப்பட்டுள்ளதாக, மலையம்பாளையம் போலீசார் தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: