நெல்லையில் ஊனமுற்றோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      திருநெல்வேலி

 

நெல்லை

நெல்லை சங்கர் நகர் ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் பொன் விழா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியும் , சென்னை திருவான்மியூர் ப்ரிடம் டிரஸ்ட் அமைப்பினரும் இணைந்து சென்னை பிரபல நரம்பியல் நிபுணர் மறுவாழ்வுத் துறை மருத்துவர் சுந்தர் தலைமையில்   ஊனமுற்றோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் சங்கர் நகர் ஜெயேந்திரா பள்ளி வளாகத்தில் வைத்து  நடந்தது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை பல இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் பக்கவாதம், போலியோ , முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டோர் , கை , கால், ஊனமுற்றோர் மற்றும் உறுப்பிழந்தோர் , மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் i மூளை காய்ச்சல் போன்ற நோயினால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலோசனையும் , பயனும் பெற்றன்ர். இம்முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளில் சுமார் 70 பேர் க்கு தேவையான உபகரணங்கள் கணிக்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்: