செஞ்சியில் சாலை பாதுகாப்பு வார விழா

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      விழுப்புரம்
002

செஞ்சி,

 

செஞ்சியில் சாலை பாதுகாப்பு வார விழா வியாழன் அன்று நடைபெற்றது.

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் செஞ்சி போக்குவரத்து காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா செஞ்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. செஞ்சி பஸ் நிலையத்தில் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பட கண்காட்சி பேருந்தை செஞ்சி டிஎஸ்பி.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் அப்பாண்டைராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி பணிமனை கிளை மேலாளர் முருகன் வரவேற்றார். போக்குவரத்து ஓட்டுனருக்கான சாலைபாதுகாப்பு குறிப்புகள் மற்றும் பொது மக்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுங்களை பொது மக்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் உதவி பொறியாளர் சுரேஷ், ஓட்டுனர் பயிற்சி ஆசிரியர் கனகராஜ் மற்றும் ஜெயக்குமார், மணிபால் மற்றும் அண்ணா தொழிற்சங் நிர்வாகிகள் சண்முகம், ஆறுமுகம், பொன்னுரங்கம், பத்மநாபன், கோவிந்தராஜ், நாகமணி, சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: