முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு வகுக்கும் சாலை விதிகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்:அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      கரூர்

கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் 28வது சாலை பாதுகாப்பு வாரவிழா கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நடைபெற்றது. விழாவில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பங்கேற்று சாலை பாதுகாப்பு வாரவிழா பேருரையாற்றி சாலை விதிகள் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.இதுகுறித்து  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது :      சாலை பாதுகாப்பு வாரவிழா 17.1.2017 முதல் 27.1.2017 வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.  விபத்தில்லா பயணத்தின் நன்மைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.  மேலும், பல்வேறு சாலை விதிகளை வகுத்து செயல்படுத்தியும் வருகிறது.  அதனை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடைபிடித்தால் மட்டுமே சாலை விபத்துக்களை தடுக்கலாம்.  அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வாசகத்தை மையமாகக் கொண்டு சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை நடத்தி வருகிறது.  அதன்படி, இந்த ஆண்டு “உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தைக் காக்கும்.  சாலையில் விழிப்புடன் இருப்பீர்” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் இந்த வாரவிழா நடைபெறுகிறது. வெளிநாடுகளில் சாலை விதிகள் கடுமையாக்கப்பட்டு ஓட்டுநரின் உரிமம் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.  அதனால் அங்கு சாலை விபத்துக்கள் குறைவாக உள்ளது.  நம் நாட்டில் வசதியான சாலைகளை அமைத்து வாகனங்களை வேகமாக இயக்கிக் கொண்டிருக்கிறோம்.  விலைமதிப்பில்லா உயிரினை கருத்தில் கொண்டு சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் முன்வரவேண்டும்.  இந்தியாவில் போக்குவரத்துத் துறையே முதன்மையாக உள்ளது.  இந்நிகழ்ச்சியில் கிரு~;ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் கே.குமரவேல், கொங்கு நிறுவன தலைவர் நாச்சிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில்,  இரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்  திருவிக, மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் வை.நெடுஞ்செழியன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில், ஆனந்தகுமார், ரெங்கநாதன், திருமதி செல்வதீபா, பிரதீபா உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago