மூலக்கரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் 68-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு  கிராமசபைகூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலெக்டர் எம்.ரவி குமார் கலந்துகொண்டார். இவ்ஊராட்சிப் பகுதியில் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அறிக்கை பொதுமக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.கிராமசபைக் கூட்டத்தில் பேசிய கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்ததாவது  சமுதாயத்தின் முன்னேற்றமும், குடும்பத்தின் முன்னேற்றமும் பெண்கள் கையில் தான் உள்ளது. கிராமப்புற மக்கள் குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு பல நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி பிறந்த தினம், மே தினம் ஆகிய நான்கு தினங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு கிராமம் சிறந்த கிராமமாக இருக்க வேண்டுமென்றால் கிராமத்திலுள்ள சுற்றுப்புறச்சூழல் நன்றாகவும்.  சுகாதராமாகவும் இருக்க வேண்டும்,மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டும். ஸ்ரீமூலக்கரை சிறந்த முறையில் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். முழு சுகாதார கிராமமாக இக்கிராமம் திகழ வேண்டும்.                      

பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டும், வாழ்க்கையில்   முன்னேறுவதற்கு கல்வி மிக அவசியம.; தமிழ்நாடு அரசு கல்விக்காக பல ஆயிரம் கோடியை செலவிடுகிறது. வருங்கால இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. இக்கிhரமத்திற்கு போதிய பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஸ்ரீமூலக்கரை கிராமம் வளர்ச்சியடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.                         

நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வேலைக்கான புதிய அடையாள அட்டைகளையும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டு ஆணையினை கலெக்டர்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, வேளாண்மை இணை இயக்குநர் வன்னியராஜ், கால்நடைத்துறை இணை இயக்குநர் இராமசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சி) லெட்சுமணன், ஆதிதிராவிடர் நலஅலுவலர் கமலம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தாட்கோ மேலாளர்  மகாராஜா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு ஊரகவளர்ச்சி முகமை) மைக்கேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, சமுக நல அலுவலர் ஜெயசூர்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் பாத்திமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடபானு, மாணிக்கவாசகம், வட்டாச்சியர் செல்வபிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: