நீர்வள ஆதாரம், மண் வளத்தை குறைக்கும் சீமைகருவேல மரங்களை அகற்றுவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்:கலெக்டர்வா.சம்பத்,தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      சேலம்
1

சேலம் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்  கலெக்டர்வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:நீர்வள ஆதாரம், மண் வளத்தை குறைக்கும் தன்மையுடை சீமைகருவேல மரங்களை தமிழகம் முழுவதும் அகற்றிட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பொது புறம்பொக்கு நிலங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், மற்றும் இதர நீர் நிலை ஆதாரங்களில் உள்ள அனைத்து சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், மாவட்ட முழுவதுமாக உள்ள அனைத்து சீமைக்கருவேல மரங்களின் அடர்த்திக்கேற்ப இம்மரங்களின் மூலம்  கிடைத்திடும் வருவாய் இனங்கனை மதிப்பீடு செய்வதற்கு மாவட்ட அளவில் இதற்கென ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட குழு  மதிப்பீடு செய்யும். மேலும், இக்குழுவானது, ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும்போது, இதன் மூலம் கிடைத்திடும் வருவாய் இனங்களை மதிப்பீடு செய்யும். அகற்றப்பட்ட கருவேல மரங்களை வெளிசந்தை மதிப்பீட்டிற்கு பகிரங்க ஏலம் விடப்பட்டு, இதன்மூலம் ஈட்டப்படும் வருவாயினை கிராம ஊராட்சி பொதுக் கணக்கில் சேர்த்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீர் ஆதாரம், மண் வளத்தினை குறைக்கும் தன்மை கொண்ட சீமை கருவேல மரங்களை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர்வா.சம்பத், தெரிவித்தார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) மு.தமிழ்ராஜன், மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரன்,  உதவி இயக்குநர் ஊராட்சிகள்(பொ) எஸ்.தெய்வசிகாமணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: