முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் பற்றாக்குறை தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      நீலகிரி

குடிநீர் பற்றாக்குறை தொடர்பான புகார்களை தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:_

                                          கண்காணிப்பு மையம்

நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை குறித்த விபரங்களை தெரிவிக்க கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததைத் தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சனையை சமாளித்து மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து உடனுக்குடன் குடிநீர் வழங்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

                                       நகராட்சி பகுதி

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்தால் அது தொடர்பான புகார்கள் அந்தந்த கண்காணிப்பு மையங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி ஊட்டி நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் 0423_ 2223242, 2223244, 2223253 ஆகிய எண்களிலும், குன்னூர் நகராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் 0423_ 2230201, 2230301, 9688272193 என்ற எண்களிலும், கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் 04262_ 220238, 220718 என்ற எண்களிலும், நெல்லியாளம் நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் 04262_ 220238, 220718 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

                           பேரூராட்சி பகுதி

பேரூராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் தேவர்சோலை 04262_222270, 222271, உலிக்கல் 0423_2281370, ஜெகதளா_0423_2204000, கேத்தி 0423_2517238, கீழ்குந்தா 0423_2509248, கோத்தகிரி 04266_ 271202, நடுவட்டம் 0423_2256930, அதிகரட்டி 0423_2590306, பிக்கட்டி 0423_2509132, ஓவேலி 04262_269437, சோலூர் 0423_2256671 ஆகிய எண்களிலும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ளவர்கள்  ஊட்டி 0423_2443996, குன்னூர் 0423_ 2233099, கோத்தகிரி 04266_ 273589, கோத்தகிரி 04266_ 261940 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்