முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைக்கிளை எப்படி ஓட்டுவது என்பது சமாஜ்வாடி கட்சிக்கு தெரியும்: மோடிக்கு அகிலேஷ் பதில்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

சீதாபூர், சூறாவளி காற்றில் சைக்கிளை எப்படி ஓட்டுவது என்பது சமாஜ்வாடி கட்சிக்கு தெரியும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

தலைவர்கள் பிரசாரம்:

இதனையொட்டி சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ. தலைவர் அமீத் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார். மீரட் மற்றும் அலிகார் ஆகிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அலிகாரில் நடந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய மோடி, உத்திரப்பிரதேச மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சூறாவளி காற்று அலை வீசுகிறது. இந்த சூறாவளி காற்றில் சமாஜ்வாடி கட்சியின் சின்னமான சைக்கிள் அடித்துச்செல்லப்படுவது உறுதி என்றார்.

அதாவது மாநில தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெறும். சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும் என்ற கருத்தில் மோடி பேசினார்.

அகிலேஷ் பதில்:

சமாஜ்வாடி கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவரும் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று சீதாபூர் பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் அகிலேஷ் யாதவ் தீவிர பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் மோடிக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். சூறாவளி காற்றில் சைக்கிளை எப்படி பாதுகாப்பாகவும் வேகமாகவும் எப்பசி ஓட்ட முடியும் என்பது சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எங்களுக்கு தெரியும் என்றார். சமாஜ்வாடி ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. மீண்டும் சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் மேலும் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவோம். மோடி அரசானது ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததால் அதிகமான ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அந்த குடும்பங்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. என் தலைமையிலான அரசுதான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கி காப்பாற்றியது. காங்கிரசுக்கு தேவையான அளவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சைக்கிளுடன் கையும் இணைந்து இருப்பதால் முன்பை விட சைக்கிளை அதிக வேகத்துடன் ஓட்டுவோம் என்று அகிலேஷ் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்