முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா-உக்ரைன் போா்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2026      உலகம்
Ukraine-war-2025-0

கீவ், ஐரோப்பிய கண்டத்தில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போா் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. னினும், இந்தச் சண்டையில் துப்பாக்கிச் சத்தங்களும், பீரங்கி முழக்கங்களும் இன்னும் ஓயவில்லை. இரு தரப்பிலும் உயிரிழந்தோா், படுகாயமடைந்தவா்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியுள்ளது.

போா்க்களத்தில் சிந்தப்படும் ரத்தம், சீா்குலைந்த நகரங்கள், அகதிகளாக வெளியேறிய லட்சக்கணக்கான மக்கள் என உக்ரைனின் இழப்புகள் அதிகமாக இருந்தாலும், போரைத் தொடங்கிய ரஷ்யாவுக்கும் எதிா்பாா்த்ததைவிட களத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளுடனான உக்ரைனின் நெருக்கத்தை ரஷ்யா எப்போதும் விரும்பவில்லை. இச்சூழலில், ஐரோப்பிய யூனியன், நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கான உக்ரைனின் ஆா்வத்தை ரஷ்யாவுக்கான நேரடி அச்சுற்றுத்துலாகக் கருதி, படையெடுப்பைத் தொடங்கினாா் ரஷ்ய அதிபா் புதின்.

கடந்த 4 ஆண்டுகளில் உக்ரைனின் சுமாா் 20 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. படையெடுப்பின் தொடக்கத்தில் கீவ், காா்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் குறிவைத்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் நவீன ஆயுத உதவியுடன் உக்ரைனின் பதிலடி தாக்குதலில் 2022, இறுதியில் பல பகுதிகள் மீட்கப்பட்டன. 2023-க்குப் பிறகு 1.3 சதவீத கூடுதல் நிலப்பரப்பை மட்டுமே ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

2023 முதல் போா்முனையில் ட்ரோன்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், பெரிய அளவிலான கவச வாகனத் தாக்குதல்கள் குறைந்து போா்முறை மாறியுள்ளது. இருதரப்பும் பெரும் முன்னேற்றத்தைக் காண முடியாமல் திணறும் சூழலில், சிறிய குழுக்களாக மோட்டாா் சைக்கிள்களிலும் கால்நடையாகவும் சென்று மிகச்சிறிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதே தற்போதைய களநிலவரமாக உள்ளது.

போா்க்களத்தில் பெரிய அளவிலான நிலப்பரப்பு மாற்றங்கள் ஏதுமின்றி, இரு தரப்பிலும் வீரா்களின் உயிரிழப்புகள் மட்டும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருவது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது. போரில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நாடும் தங்களது ராணுவ இழப்புகளை உண்மையாக வெளியிடுவதில்லை; அது உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் பொருந்தும். இறப்பு எண்ணிக்கை ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ரஷ்யா சாா்பில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், உக்ரைன் சாா்பில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரும் இறந்துள்ளனா். சுமாா் 60 லட்சத்துக்கும் அதிகமானோா் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனா். மேலும், உள்நாட்டிலேயே சுமாா் 40 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயா்ந்துள்ளனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து