கோவில்பட்டியில் வணிகர்சங்க பேரமைப்பு சார்பில் வெளிநாட்டு குளிர்பானங்கள் கொட்டி அழிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக வெளிநாட்டு குளிர்பாணங்கள் கோக், பெப்சி, போன்றவற்றை விற்பதில்லை என்று விழிப்புணர்வு கூட்டம் சங்க வடக்குமாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் பயணியர்விடுதி முன்பு நடந்தது. சங்க வடக்கு மாவட்ட செயலாளர் ராதாகிரு~;ணன் வரவேற்றார். தொகுதி செயலாளர் சேதுரத்தினம், மாதாங்கோவில் வியாபாரிகள் சங்க தலைவர் சங்கர்ரஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதாங்கோவில் தெரு வியாபாரிகள் சங்கம் சங்கரநாராயணன், அண்ணா பேரூந்து நிலையம் சங்க தலைவர் சமுத்திரவேல், மார்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர். பெப்சி, கொக்ககோலா, உட்பட வெளிநாட்டு குளிர் பானங்கள் ரோட்டில் கொட்டபட்டன. பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: