கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு கலெக்டர் டி.பி.ராஜேஷ் பார்வையிட்டார்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      கடலூர்

கடலூர். மார்ச். 04-

 

 

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டார். கலெக்டர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டபிறகு தெரிவித்ததாவது,கடலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. 34,930 மாணவ மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள். இதில் 200 பள்ளிகளிலிருந்து 31,527 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 83 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து விதமாக பாதுகாப்பு வசதிகளும், அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தேர்வு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உடனிருந்தூர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: