முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆலோசனைக்குழுக் கூட்டம் கலெக்டர் .இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் பணி, முறைகேடுகளை களைவது, பொது விநியோகத் திட்ட பொருட்கள் கள்ளச்சந்தைக்கு திருப்பி விடுவதை தடுத்தல், போலி குடும்ப அட்டைகளை களைதல், தரமான பொருட்களை வழங்குதல், பொருட்கள் இருப்பு விவரம், உயர் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை பொருட்களை அங்காடிகளுக்கு அனுப்புதல் ஆகியவை குறித்து கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.கடந்த 30.11.2016 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளால் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தன்னார்வ அமைப்பினரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதுடன் கூட்டம் நிறைவுற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) அ.அனந்தராம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களும், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago