முக்கிய செய்திகள்

பன்றி காய்ச்சல் என்றால்?

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      மருத்துவ பூமி
swine-flu-

Source: provided

பன்றி காய்ச்சல் என்றால் பிமிழிமி எனும் வைரஸ் கருகியால் ஏற்படும் தொற்றுநோய். இந்த நோய் ஒருவரின் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியதென்றாகும்.
இந்த நோயின் ஆரம்பம் மற்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் போலவே இருக்கும். (ஜீரம், இரும்பல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி, குளிர் நடுக்கம், சோர்வு). தற்போது பன்றி காய்ச்சல் தெற்கு உலகம் முழுவதில் உள்ள நாடுகளை பாதித்துள்ளது. இந்நிலைமை நம்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. எனவே இதன் பரவுதல் மற்றும் சிகிச்சையின் அதிசய நெறிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.

உலக சுகாதார அமைப்பு (கீஞிளி) பிமிழிமி தொற்று உலகமுழுவதிலும், இந்தியா உட்பட அதின் பரவல் இப்பொழுது தவிர்க்க முடியாத மற்றும் கட்டுப்படுத்த அறிதாகமிருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

எப்படி பரவுகிறது?

நோயால் பாதித்தவர்கள் இரும்பும்போதோ தும்பும்போதோ அவரிடமிருந்து வெளிவரும் துளிகள் மூலம் கிருமி மற்றவருக்கு பரவும். இந்த நோயின் தொடக்க முதல் நாளிலிருந்து ஏழு நாள் வரை தொற்ற முடியும். பன்றி காய்ச்சல் காற்றினால் பரவாது. முதலில் பாதிக்கப்பட்டவரின் இரும்பல், தும்பல் மூலம் மற்றொருவர் தொடர்பில் வரும்போது, இரண்டாவது பாதித்தவர் உபயோகித்த பொருளை மற்றொருவர் உபயோகித்து அவரது கண், மூக்கு, வாய், தொடர்புக்கு வரம்போது பரவும்.

பன்றி காய்ச்சல் பரவுதல் எப்படி தடுப்பது? தொற்று பரவுதலை தடுக்க எளிமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* இரும்பல், தும்பல் வரும்போது வாயை கையால் அல்லது துணியால் மூடிக்கொள்ளுதல்,

* மற்றொருவர் இரும்பும்போதோ தும்பும்போதோ இடைவெளிவிட்டு நிற்பது.

* கூட்ட நெரிசல் தவிர்ப்பது.

* கைகளை அவ்வப்போது கழுவுதல்.

* நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றுவது (தேவையான தூக்கம், உடற்பயிற்சி, போதியளவு நீர் பருகுதல் சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளுதல்)

* சலி இரும்பல் பாதித்தவரிடம் இருந்து விலகி இருத்தல்.

* நோய் தொற்றினால் பாதித்து இருந்தால் அந்த நபர் வேலைக்கோ, பள்ளிக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும்.

பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

1. ஜூரம், தலைவலி, இரும்பல், தொண்டை வலி, உடல் வலி, வாந்தி, பேதி, வயிறு வலி, சதைபிடிப்பு, நடப்பதில் சிரமம்.

மேல் குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேலான அறிகுறி இருந்தால் பிமிழிமி என்ற தொற்றல் பாதித்துயிருக்க வாய்ப்புண்டு. 65 வயதிற்கு மேல் அல்லது 8 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஆஸ்துமா, உடல் பருமன், கர்ப்பிணி பெண்கள் உட்பட கவனமாக கண்காணிக்க வேண்டும். இவர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கோ, சோதனை மையத்திற்கோ கொண்டு செல்ல வேண்டும்.

பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் நோய் குணமாகி 7 நாள் வரை பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. பன்றி காய்ச்சல் அறிகுறிகள் அறிந்தால் என்ன செய்வது?

1. மிதமான காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, வாந்தி பேதி, உள்ளவர்கள் தீவிரமாக கண்காணித்து ஓரிரு இரு நாட்களுக்கு பிறகு, மருத்துவரிடம் சோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தேவைப்பட்ட மருத்துவ சிகிச்சை வீட்டிலிருந்து பெறலாம். பன்றிக் காய்ச்சலுக்கான சோதனை தேவைப்படாது.

2. அதிக அளவில் காய்ச்சலோ, தொண்டை வலியோ இருந்தால், வீட்டிலேயே தனிமைப்படுத்தி பன்றிக் காய்ச்சலுக்கான மருந்தை உட்கொள்ளலாம்.

3. பன்றிக் காய்ச்சல் மருந்தை உட்கொள்ள தேவைப்படுபவர்கள

1) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2) கர்ப்பிணி பெண்கள் 3) 65 வயது முதியவர்கள் மற்றும் 4) நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் பாதித்தவர்கள், இரத்தத்தில் பிரச்சினை, சர்க்கரை, நரம்பியல் பிரச்சினை, புற்றுநோய் மற்றும் எச்ஐவி உள்ளவர்கள். 5) நீண்ட நாள் ஸ்பீராய்டு போன்ற மாத்திரையை உட்கொள்பவர்கள். 6) பி1, ழி1 சோதனை தேவைப்படாது. 7) மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ள நோயாளிகள் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, கூட்டத்தில் செல்வதை தவிர்த்து தன் குடும்பத்தாருக்கு நோய் பரவுதலை தடுக்கலாம். 8) மேலும் மேலே குறிப்பிட்ட அறிகுறிகளோடு சேர்ந்து கீழ்வரும் ஏதேனும் ஒரு அறிகுறி ஏற்பட்டால் சோதனை மற்றும் மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

* மூச்சு திணறல், நெஞ்சு வலி, மயக்கம், இரத்த அழுத்தம் குறைபாடு, சலியில் இரத்தம் கலப்பு, விரல் நுனியில் அல்லது நகம் நீலமாக மாறுதல், குழந்தைகள் உணவு மறுத்தல் மற்றும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்கனவே உள்ள நோய் முற்றிப் போகுதல்.

முகமூடி தேவையா?

உலக சுகாதார மையம் இந்திய அரசு மற்றும் பல மருத்துவர்கள் முகமூடி அணிவதால் பெரிய அளவிற்கு நோயை தடுப்பதில் பயனில்லை என்பதை சொல்கிறார்கள். ஏனென்றால் பன்றிக்காய்ச்சல் காற்று தொற்று கிடையாது. ஆனால் நோய் பாதித்தவர் ஒருவரிடமிருந்து தொற்று பரவ வாய்ப்பு உண்டு என சந்தேகம் இருந்தால் முகமூடி அணியலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: