உடலிலுள்ள ஊளைச்சதையை குறைத்திடும் வாழையின் நன்மைகள்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      வாழ்வியல் பூமி
Banana

Source: provided

பெரும்பாலான விழாக்கள், வரவேற்புகள், மற்றும் விருந்து உபசரிப்புகள் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் அலங்கார தோரணமாக வாழைமரத்தைபயன்படுத்துகின்றனர்.அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்ற பெயர்களில் அழைத்தார்கள்.

மேலும் வாழையை நம் முன்னோர்கள் பெண்களாகவே கருதினார்கள், இதனால் வாழை மரம் இல்லாத வீட்டை பெண்கள் இல்லாத வீடு என்றும் சொல்லுவர்கள்.வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களான பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என அனைத்து பகுதிகளும் மருத்துவத்தில் சிறப்பாக பயன்படுகிறது. வாழைத்தண்டில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் A, விட்டமின் C போன்ற சத்துகள் இருப்பதால், வாழைத்தண்டை ஜூஸ் மற்றும் சமைத்து சாப்பிடலாம்.

வாழைத்தண்டின் பயன்கள் :

வாழைத்தண்டை ஜூஸ் செய்து சாப்பிட்டால், ஊளைச் சதைகளை குறைத்து உடல் பருமன் இல்லாமல் உடலை சீராக வைக்கிறது. தினமும் உணவில் வாழைத்தண்டை சேர்த்து கொண்டால் வயிற்றுப் புண்களை சரி செய்து, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை குணமாக்குகின்றது. பாம்பு கடித்துவிட்டால், அதற்கு வாழைத்தண்டை ஜூஸ் செய்து கொடுத்தால், பாம்பின் விஷம் குறையும்.

நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. வறட்டு இருமலுக்கு வாழைத்தண்டு ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாதவிடாயின் போது அதிகப்படியான ரத்தப் போக்கு போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக வாழைத்தண்டு பயன்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் காலையில் வாழைத்தண்டு ஜூஸ் செய்து தவறாமல் குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: