முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாக் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.- கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 127ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் செயலாளர் மலரகம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஜெ.ரவிசங்கர் வரவேற்புரை ஆற்றினார். நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் “மதியின் விளைச்சல்” என்ற தலைப்பில் பேசுகையில் பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்புக்குரியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்.

 ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14வது மகன். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண  ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தவர். அங்கு அவர் 1915ல் பண்டைய இந்தியாவின் வாணிகம் என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார். காந்திஜி உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்.  இப்படி எதனையும் வெளிப்படையாகப் பேசியவர் என்றார்.

 கூட்டத்தில் ப.தங்கமணி, வண்டியூர் மாணிக்கராஜ், வ.முத்து, பி.பன்னீர்செல்வம், ஜான்பெலிக்ஸ் கென்னடி, கே.ஆர்.தெட்சிணாமூர்த்தி, ஏ.சி.பாபுலால், கோ.ஏகாம்பரம், அ.பாலு, ராம.மீனாட்சிசுந்தரம், ஹைகூ.இரா.இரவி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.அண்ணாமலை, எஸ்.ஆனந்தராஜ், முனைவர் க.சின்னப்பா, வீ.காளீஸ்வரன், கவிஞர்கள் சு.கோபாலகிருஷ்ணன், மீ.ராமசுப்பிரமணியன், அழ.சிதம்பரம் கலந்து கொண்டனர். ரெ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 2 hours ago