கடலூர் வட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      கடலூர்
cuddalure collector jamapanthi 2017 05 26

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1426 பசலி ஆண்டு நிலவரி கணக்கு முடிப்பு பற்றிய ஆய்வு (ஜமாபந்தி) முதல் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   ஜமாபந்தியினை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

 ஜமாபந்தி தொடக்கம்

மேலும், கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், பண்ருட்டி வட்டத்தில் கடலூர் சார் ஆட்சியர், சிதம்பரம் வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்), புவனகிரி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர், விருத்தாச்சலம் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திட்டக்குடி வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), வேப்பூர் வட்டத்தில் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் இன்று 25.05.2017 முதல் சில தாலுக்காவில் 06.06.2017 வரையிலும் சில தாலுக்காவில் 09.06.2017 வரையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

நலத்திட்ட உதவிகள்

கடலூர் வட்டத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   இன்று ஜமாபந்தியினை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இன்று வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாலா, ஜெ.பாலச்சந்திரன், நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்திமதி, பாதிரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலெக்டர் அவர்களிடம் பட்டா மாறுதல் கோரி அளிக்கப்பட்ட மனுக்களின்பேரில் உடனடி தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கும் பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்தொகைக்கான ஆணைகளையும் இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   வழங்கினார்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

ஜமாபந்தியில் தொண்டாமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.பாலச்சந்திரன் என்பவர் பட்டா மாறுதல் கோரி மனுவினை கலெக்டர் அவர்களிடம் வழங்கியதில் கடந்த ஐந்து வருடங்களாக பட்டா மாறுதல் கோரி மனு அளித்ததன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை எனக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினை வழங்காத நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனுவின்மீது உடனடி தீர்வு காணப்பட்டு அரை மணிநேரத்தில் கலெக்டர் அவர்களிடமிருந்து பட்டா மாறுதலுக்கான ஆணை பெறப்பட்டதில் நானும் எனது குடும்பத்தாரும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கலெக்டர் அவர்களிடம் நேரில் தெரிவித்தார்

மனுமீது நடவடிக்கை

ஜமாபந்தியில் திருவந்திபுரம் குறுவட்டம் தொண்டமாநத்தம், கோதண்டராமாபுரம், பாதிரிக்குப்பம், கருப்படித்துண்டு, கூத்தப்பாக்கம், நடுவீரப்பட்டு, சேடப்பாளையம், செம்மங்குப்பம் ஆகிய கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர்  பெற்று அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காண்பதற்காக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் னுக்களை அளித்தார்.

இன்று நடைபெறும் இடங்கள

இன்று திருவந்திபுரம் குறுவட்டம், ராமாபுரம், கெங்கமநாயக்கன் குப்பம், அன்னவல்லி, சென்னப்பநாயக்கண் பாளையம், அரிசிபெரியாங்குப்பம், வெட்டுக்குளம், மாவடிப்பாளையம், குமாரப்பபேட்டை, வெள்ளக்கரை ஆகிய கிராமங்களிலும், மே-29ம் நாள் திருவந்திபுரம் குறுவட்டம் வானமாதேவி (வடக்கு), விலங்கல்பட்டு, வானமாதேவி(தெற்கு), திருமாணிக்குழி, திருவந்திபுரம், ஓட்டேரி, ஆகிய கிராமங்களிலும், மே-30ம் நாள் ரெட்டிச்சாவடி குறுவட்டம் பில்லாலி, குணமங்கலம், வரக்கால்பட்டு, காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம், குண்டு உப்பலவாடி, பெரியகங்கணாங்குப்பம், சின்னகங்கணாங்குப்பம், உச்சிமேடு, சுபஉப்பலவாடி, அழகியநத்தம் ஆகிய கிராமங்களிலும், மே-31ம் நாள் ரெட்டிச்சாடி குறுவட்டம் களையூர், இரண்டாயிரவிளாகம், திருப்பணாம்பாக்கம், கரைமேடு, உள்ளேரிப்பட்டு, மலையபெருமாள் அகரம், பள்ளிப்பட்டு, நல்லாத்தூர், மேலக்குப்பம், தூக்கனாம்பாக்கம், தென்னம்பாக்கம் ஆகிய கிராமங்களிலும், ஜுன்-1ம் நாள் ரெட்டிச்சாவடி குறுவட்டம் கீழ்குமாரமங்கலம், ஒடலப்பட்டு, மேலழிஞ்சிப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மதலப்பட்டு, புதுக்கடை, வடபுரம் கீழ்பாதி, சிங்கிரிக்குடி, கிளிஞ்சிக்குப்பம், செல்லஞ்சேரி, காரணப்பட்டு ஆகிய கிராமங்களிலும், ஜுன்-2 ம் நாள் மஞ்சக்குப்பம் குறுவட்டம் காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், ஆலப்பாக்கம், கம்பளிமேடு, தியாகவல்லி, திருச்சோபுரம், பச்சையாங்குப்பம், பொன்னியாங்குப்பம் ஆகிய கிராமங்களிலும், ஜுன்-5ம் நாள் மஞ்சக்குப்பம் குறுவட்டம் மருதாடு, செஞ்சிகுமாரபுரம், தோட்டப்பட்டு, நத்தப்பட்டு, காரைக்காடு, குடிகாடு, கடலூர் முதுநகர் (முனிசிபல் அல்லாதது) ஆகிய கிராமங்களிலும், ஜுன்-06ம் நாள் மஞ்சக்குப்பம் குறுவட்டம் செல்லங்குப்பம், கடலூர் முதுநகர் (முனிசிபல்) திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், வில்வராயநத்தம், உதரமாணிக்கம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், கோண்டூர் (முனிசிபல்), கேண்டூர் (முனிசிபல் அல்லாதது), வெளிச்செம்மண்டலம், கரையேறவிட்டகுப்ப்ம (முனிசிபல்), கரையேறவிட்டகுப்பம் (முனிசிபல் அல்லாதது) ஆகிய கிராமங்களிலும் கலெக்டர் அவர்களால் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படவுள்ளது.

நடவடிக்கை

ஜமாபந்தியில் பட்டாமாற்றம் கோரி 81 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 26 மனுக்களும், குடும்ப அட்டை, சான்றிதழ் கோரி மற்றும் இதர மனுக்கள் உள்ளிட்ட 41 மனுக்களும் ஆகமொத்தம் 148 மனுக்களை கலெக்டர் அவர்களால் பெறப்பட்டு சம்மந்தப்பட்டு துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பலர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எம்.டி.கிருபாகரன், உதவி இயக்குநர் (நிலஅளவை) எஸ்.ரவி, கடலூர் வருவாய் வட்டாட்சியர் பி.பாலமுருகன், வட்டாட்சியர் (ச.பா.தி) எஸ்.சிவா, கலெக்டர் அலுவலக மேலாளர் பி.தேவனாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுரேஷ்குமார், கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பார்கவி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து