முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானாவாரி சாகுபடி விவசாயிகளுக்கான மகத்தான திட்டம்: கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மானாவாரி விவசாயத்தில் தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திடும் நோக்கத்தில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற சிறப்புத் திட்டம் 2016-17ஆம் ஆண்டு தொடங்கி 2019-20 முடிய திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் ரூ.24.087 கோடி மதிப்பீட்டில் 30 தொகுப்புகளில் 30 ஆயிரம் எக்டரில் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஒருங்கிணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்தப்பட உள்ளது.

சிறப்புத் திட்டம்

இத்திட்டத்தில் மானாவாரி நிலங்கள் (புன்செய்) தேர்வு செய்யப்பட்டு, 1000 எக்டர் மானாவாரி சாகுபடி நிலங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்;பட்ட கிராம பஞ்சாயத்துகளிலிருந்து தொகுப்பாக தேர்வு செய்யப்பட்டு, முதலாமாண்டில் 18 தொகுப்புகளிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12 தொகுப்புகளிலும் ஆக மொத்தம் 30 தொகுப்புகளில் மொத்தம் 30 ஆயிரம் எக்டர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பாண்டில் 18 வட்டாரங்களில் 18 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு தொகுப்பு மேம்பாட்டுக் குழுக்கள், வட்டார குழுக்கள் மற்றும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கிராம மக்களின் தேவைகள் குழுக்களின் முடிவுகள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல் மற்றும் தொகுப்பிற்கு உகந்த பயிர் மேலாண்மை பணிகளை செயல்படுத்திட தொகுப்பு மேம்பாட்டுக்குழு வழிநடத்தி; செல்லும்.

இத்திட்டத்தில் நடப்பாண்டில் 50 சதம் மானியத்தில் எக்டருக்கு ரூ1250/- வீதம் 18 ஆயிரம் எக்டருக்கு உழவு மானியம் வழங்கப்படும். மேலும், தானியங்கள்; மற்றும் சிறுதானிய பயிர்கள் 2912 எக்டரிலும், பயறு வகை 13 ஆயிரத்து 588 எக்டரிலும், எண்ணெய்வித்துக்கள் ஆயிரத்து 500 எக்டரிலும் பயிரிடப்பட உள்ளது. இதற்காக விதை மற்றும் உயிர் உரங்கள் 50 சதம் மானிய விலையில் வழங்கப்படும். மேலும், மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயறு உடைக்கும் இயந்திரங்கள், செக்கு இயந்திரங்கள் மற்றும் சிறுதானிய சுத்திகரிப்பு இயந்திரங்கள் வாங்கிட அரசு நிதி உதவி; வழங்கப்படும். படித்து வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற இளைஞர்களைக் கொண்டு இயந்திர வாடகை மையம் 80 சதம் மானியத்தில் அமைக்கப்படும்;. கால்நடை பராமரிப்பிற்காக ஊட்டச்சத்து கலவை விநியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிக்களுக்காக நிதியுதவி வழங்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மானாவரி வேளாண்மையில் தொழில்நுட்ப பயிற்சி இன்றியமையாதது. எனவே, மாநில அளவில் முதன்மை பயிற்சியாளர்களால் கடந்த 11ந் தேதி அன்று சென்னையில் நடத்தப்பட்ட பயிற்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்படி பயிற்சி, வட்டார அளவிலும், கிராம அளவிலும் திட்ட செயலாக்கக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பெற்ற முதன்மை பயிற்சியாளர்களால் நடத்தப்படவுள்ளது. இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களை அறிய தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து