முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை காவல் நிலையங்களில்  புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் ஒரே நாளில் 418 மனுக்கள் பெறப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      சென்னை

புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில், ஒரே நாளில் 418 மனுக்கள் பெறப்பட்டன.

12 காவல் மாவட்டங்கள்


பொதுமக்கள் தங்களது குறைகளை அல்லது புகார்களை கொடுக்க காவல் நிலையங்கள் செல்லும்போது, காவல் ஆய்வாளர்கள் பணிச்சுமை மற்றும் சரகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அலுவல் போன்ற பல காரணங்களால் அந்த பணிகளுக்கு செல்லும் நிலை ஏற்படுவதால், பொதுமக்கள் காவல் நிலையங்களில் ஆய்வாளர்களை சந்தித்து புகார் கொடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக தகவல்கள் கிடைத்தன.

இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும், அவர்களது குறைகளை தீர்க்கவும், சென்னை பெருநகர காவல் ஆணையர் .கே.விசுவநாதன், சில உத்தரவுகள் பிறப்பித்தார்.அதாவது, காவல் நிலையங்களில் காலை 2 அல்லது 3 மணி நேரமோ, மாலை 1 அல்லது 2 மணி நேரமோ கட்டாயம் காவல் ஆய்வாளர்கள் காவல் நிலையத்தில் இருந்து, அங்கு வரும் பொதுமக்களின் புகார்களை பெற வேண்டும் எனவும், அந்த குறிப்பிட்ட நேரம் குறித்து காவல் நிலைய அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டு, பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும் எனவும், அந்த குறிப்பிட்ட நேரத்தில், தவிர்க்க முடியாத காரணத்தால் ஆய்வாளர் வெளியே செல்ல நேர்ந்தால், குற்றப்பிரிவு ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர்கள் பொதுமக்களின் புகார்களை பெற்று, நடவடிக்கைகள் எடுக்கும்படியும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேற்று முன் தீனம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அதிகாரிகள் மூலம் உத்தரவிட்டார்.

அதன்பேரில், நேற்றுமுன் தீனம் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்களிடம் புகார் பெறுவதற்காக நிலையத்தில் இருந்தனர். இதனால் பொதுமக்கள் தயக்கமின்றி காவல் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுத்ததால், நேற்றுமுன் தீனம் ஒரே நாளில் மட்டும் 418 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

பூக்கடை காவல் மாவட்டத்தில் 17 மனுக்களும், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 30 மனுக்களும், மாதவரம் காவல் மாவட்டத்தில் 20 மனுக்களும், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 19 மனுக்களும், அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 32 மனுக்களும், அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் 47 மனுக்களும், அடையாறு காவல் மாவட்டத்தில் 26 மனுக்களும், தி.நகர் காவல் மாவட்டத்தில் 40 மனுக்களும், பரங்கிமலை காவல் மாவட்டத்தில் 77 மனுக்களும், திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 28 மனுக்களும், கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் 67 மனுக்களும், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 15 மனுக்களும் என மொத்தம் 418 புகார் மனுக்கள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து