ராமநாதபுரத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      ராமநாதபுரம்
rmd news

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரத்தில் கைத்தறி துணிநூல் துறையின் சார்பாக,  தேசிய கைத்தறி தினத்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைத்தறி ஆடைகள் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் கைத்தறி கண்காட்சியினை கலெக்;டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாள் தேசிய கைத்தறி தினமாக கடையிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரம், தாஜ் மினி ஹாலில் கைத்தறி துணிநூல் துறையின் சார்பாக சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது 17-ந் தேதி தொடங்கி வரும் 22.07.2017 வரை தினமும் காலை 9.00 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய   பரமக்குடி சரககைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழ் உள்ள 88 கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மற்றும் ஈரோடு, கரூர், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள், செயற்கைபட்டு சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், காட்டன் சில்க், செட்டிநாடு காட்டன் சேலைகள்,துண்டுகள்,போர்வைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட ரகங்களும், சிறப்புமிக்க நாகர்கோவில் வேட்டி, கடலூர் குறிஞ்சிப்பாடி கைலி ரகங்களும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சிக்கு விற்பனை குறியீடாக ரூ.30 இலட்சத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ரகங்களுக்கும் 20மூ வரை அல்லது ரூ.100- அரசு தள்ளுபடி வழங்கப்படும். எனவே, கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்களின் பாரம்பரியம், தொன்மை, தனித்தன்மை ஆகியவற்றை பொதுமக்கள்அறிந்து கொள்ளும் வகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியினை கண்டு களிப்பதோடு, குறைந்த விலையில் தரமான  கைத்தறி ஆடை ரகங்களை பெற்று பயனடையலாம். இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்தம் உற்பத்தியினை அதிகரித்திட ஊக்குவித்திடவும் வாய்ப்பாக அமையும். இவ்வாறு பேசினார்.
 இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் செ.சம்பத், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை,  கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர்கள் வி.ஜி.அய்யான், உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து