போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என மக்களை அறிவுறுத்தும் சூழலை உருவாக்காதீர்கள் நியமன எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

புதன்கிழமை, 19 ஜூலை 2017      புதுச்சேரி

புதுவை முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது:

 குழப்பத்தை ஏற்படுத்தும்

பாரதிய ஜனதா நிர்வாகிகள் 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதே நேரத்தில் புதுவை சபாநாயகர் இந்த நியமனம் செல்லாது என்று அறிவித்துள்ளார். இந் நேரத்தில் தாங்கள்தான் எம்எல்ஏக்கள் என்று கூறிக்கொண்டு அரசு அலுவலகங்களுக்கு பாரதிய ஜனதாவினர் சென்று வருகின்றனர். மனு கொடுப்பது, அரசு அதிகாரளிகளை பணி செய்ய விடாமல் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது மக்கள் மத்தியல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்து வைத்த கவர்னரே இனி என் கையில் ஒன்றும்இல்லை, நீதிமன்றம் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை அவரால் பதவி ஏற்றவர்களும் கருத்தில் கொள்ள வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அரசு அலுவலகங்களுக்கு சென்றுகுழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தொடர்ந்து இதேநிலை நீடித்தால் போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என மக்களிடம் அறிவுறுத்தும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து