முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்.-அருள்மிகு  கலசலிங்கம்  மருந்தாக்கியல்  கல்லூரியின் ஆண்டு விழா  மற்றும்  பட்டமளிப்பு விழா கலசலிங்கம்  பல்கலைக்கழக  துணைத்தலைவர்  முனைவர் எஸ். சசிஆனந்த்  தலைமையில் நடைபெற்றது.
அவர் பேசுகையில்  மாணவ,  மாணவியர்  தங்கள் பெற்றோரின்  தியாகத்திற்கு  மதிப்பளித்து  நன்றியுணர்வோடு  நடந்துகொள்ளவேண்டும் என்றும்   நல்ல  பழக்கவழக்கங்களை  சமூகத்திடம்   எடுத்துச்சொன்று  தங்கள்  கல்லூரியின்  மதிப்பை  நிலைநாட்ட  வேண்டும் என்று  கூறினார்.
வரவேற்புரை  பேசிய  கல்லூரி  முதல்வர் முனைவர் என்.  வெங்கடேசன்   ஆண்டறிக்கை  சமர்ப்பித்தார்.
தலைமைவிருந்தினராகக் கலந்துகொண்ட  ஃபோர்ட்ஸ்  இந்திய  லெபாரட்டரீசின் நிறுவனர்   எஸ். வி.  வீரமணி  முதுநிலை மற்றும் இளநிலைப் பட்டம்  பெற்ற மாணவர்கள் 45பேருக்கு  பட்டங்களை  வழங்கி தனது உரையில் “உலகில் உற்பத்தி  செய்யப்படும்  மருந்துகளில்  மூன்றில்  ஒரு பங்கு  இந்தியாவில்  உற்பத்தி    செய்யப்படுகிறது.  மருந்தாக்கியல் துறையில்   ஏராளமான  வாய்ப்புகள்  உள்ளன.  அதே  நேரம் சமுதாயத்தில்  ஏராளமான  சவால்களும்  உள்ளன.   ஆனால் சவால்களை  வாய்ப்புகளாக  மாற்றினால்  உயர்ந்த  இடத்தை ;அடையலாம்.  என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்ட தமிழ்நாடு  முன்னாள் மருந்துகள்  கட்டுப்பாட்டு  இயக்குநர்   சாரங்கப்பாணி வாழ்த்துரை  வழங்கினார்.
பல்கலை  மற்றும்  மருத்துவ  கல்வி இயக்கத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த  மாணவ மாணவியருக்கும்  அதற்காக  உழைத்த  ஆசிரியர்களுக்கும் பரிசுகளும்  சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பேராசிரியர் முனைவர் வி. லவக்குமார்  நன்றியுரை  வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து