முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குழந்தைகளுக்கு ரோட்டா மருந்து வழங்க திட்டம்

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம்மாவட்டத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 19 ஆயிரம் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் சொட்டுமருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் முனைவா ;நடராஜன் தெரிவித்துள்ளார்.
  ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பாக குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-உலக சுகாதார நிறுவன கணக்கீட்டின்படி உலகளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பதற்கு வயிற்றுப்போக்கு நோய் முக்கிய காரணமாக உள்ளது.  இந்திய அளவில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 13 சதவீதம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக்கின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு நோயின் காரணமாக நாளடைவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு குழந்தைகளின் உடல் மற்றும் அறிவு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.  இத்தகைய வயிற்றுப்போக்கு நோயானது 40 சதவீதம் ரோட்டா வைரஸ் என்ற கிருமி தொற்றின் காரணமாக ஏற்படுகின்றது.
 தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் மூலம், வயிற்றுப்போக்கினால் ஏற்படும் குழந்தைகள் மரணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்களை நடத்திட உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்குள் மொத்தம் 19,189 குழந்தைகளுக்கு இச்சொட்டு மருந்து வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த வைரஸ் தடுப்பு சொட்டு மருந்தானது 45 நாட்கள் (1 1-2 மாதங்கள்;) 75 நாட்கள் (2 1-2 மாதங்கள்)  105 நாட்கள் ( 3 1-2 மாதங்கள்) பருவநிலையில் உள்ள குழந்தைகளுக்கு பென்டா தடுப்பூசியுடன் வாய் வழியாக வழங்கப்படுகிறது. 
 இச்சொட்டு மருந்து முகாமானது வாரம் தோறும் புதன் கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  எனவே தாய்மார்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி கொண்டு தங்களது குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து வழங்கி குழந்தைகளை வயிற்றுப்போக்கு நோயிலிருந்து பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு கூறினார்.
 இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பி.குமரகுருபரன், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜவஹர், நகர்ப்புற மருத்துவ அலுவலர் மரு.எபனேசர், வட்டார மருத்துவ அலுவலர் மரு.முனீஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து