
Source: provided
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது. நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன் மாதா பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக அர்த்த நாரிசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.