முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

Source: provided

புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு  பிறப்பித்துள்ளது.

மத்திய, மாநில தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையர்கள் நியமனத்தில் ஏற்படும் காலதாமதத்தால் தகவல் அறியும் விண்ணப்பங்கள் ஏராளமாக தேங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்து, மனுதாரர் அஞ்சலி பரத்வாஜ் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில், மத்திய தகவல் ஆணையத்தின் தகவல் ஆணையர்களின் நியமனம் குறித்த காலத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்து மத்திய, மாநில அரசுகளுக்குப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவித்து மீண்டும் அஞ்சலி பரத்வாஜ் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்ய பக்சி அமர்வு மீண்டும் விசாரித்தது. முடிவில், நீதிபதிகள், தகவல் ஆணையர்கள் நியமனத்தின் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்பதில் சந்தேகிக்க வேண்டியதில்லை, தகவல் ஆணையர்கள் நியமிக்காத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உடனடியாக நியமிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து